Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு கலந்துரையாடலில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லின சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சமய நல்லிணக்க செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு கல்லடி சிவில் பிரஜைகள் அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளான லோரா, சுசானா உள்ளிட்ட பிரதிநிதிகளும், மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வீ.கமலதாஸ், உப தலைவர் ஜீனைட் நளீமி, மட்டக்களப்பு சிவில் அமைப்பின் ஊடக இணைப்பாளர் தேவ அதிரன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரசசார்பற்ற இணையத்தின் தலைவி திருமதி.வீ.சோமாவதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக யுத்தத்திற்குப் பின்னரான சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.


Post a Comment

0 Comments