Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இல்லங்கள் தோறும் சேமிப்பு திட்டம் முனைக்காட்டில் ஆரம்பம்

மட்டக்களப்பு முனைக்காட்டுகிராமத்தில் இல்லங்கள் தோறும் சேமிப்பு எனும் திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இன்று புதன்கிழமை (11) முனைக்காடு கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலய கும்பாபிசேக நிகழ்வின் போது 2014ம் ஆண்டில் முனைக்காட்டில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தலா ஆயிரம் ரூபாவீதம் மக்கள் வங்கிக்கிளையில் வைப்பிலிடப்பட்ட சேமிப்பு புத்தகம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஆலய முன்றலில் ஆலயபரிபாலனசபை, கிராமஅபிவிருத்திச்சங்கங்களின் ஏற்பாட்டில் மு.சச்சிதானந்தக்குருக்கள் அவர்களின் ஆசியுரையுடன் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஞா.சிறிநேசன், கோட்டக்கல்வி அதிகாரி ந.தயாசீலன் கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி முகாமையாளர் மா.இளங்கோ உட்பட பல்வேறு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
பிள்ளைகளின் எதர்கால கல்வியினை கருத்தில் கொண்டும் பெற்றார்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில்  1350ற்கு மேற்பட்ட குடும்பங்களையும் 4 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய முனைக்காட்டுக்கிராமத்தில் 2014 முதல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சேமிப்புக்கணக்கு திறந்து ஒரு தொகைப்பணம் வைப்பிடலப்படும்.

இத்திட்டத்தின் கீழ் முனைக்காட்டுக்கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் புதிதாக வங்கிக்கணக்குத்திறந்து ஒரு தொகைப்பணம் வைப்பிலிடப்பட்டு சேமிப்புப்புத்தகம் பெற்றாரிடம் கையளிக்கப்படும் என திட்டத்திற்கு நிதிஉதவி வழங்கும் முனைக்காட்டைச்சேர்ந்த தாந்தியான் வேதநாயகம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு  மாவட்டத்தில் முனைக்காட்டு;கிராமத்திலேயே இத்திட்டம்  முதன்முதலாக அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் கூடுதலான தொகையினை பிள்ளைகளின் பெயரில் சேமிக்கும் பெற்றார்களுக்கு  ஊக்குவிப்பதற்காக ஒரு தொகைப்பணம் வைப்பிலடப்படும் என திட்டத்தினை அமுல்படுத்தும் தா.வேதநாயகம் தெரிவித்தார்.
             
            

Post a Comment

0 Comments