Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு பார் வீதியில் நடைபாதை வியாபாரங்களை தடைசெய்யும் பதாகைகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில பிரதேசங்களில் நடைபாதை வியாபாரங்களை தடைசெய்யும் பதாகைகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் நடப்பட்டுள்ளன.
குறிப்பாக மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட அதிகளவு வீதியோர வியாபாரங்களை கொண்டுள்ள பார் வீதியில் இந்த பதாகைகள் நடப்பட்டுள்ளன.
குறித்த பகுதி நடைபாதை வியாபாரங்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது எனப்பொறிக்கப்பட்ட பதாகைகளே இவ்வாறு நடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அன்றாடம் தாம் மேற்கொண்டுவரும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த நடைபாதை வியாபரரிகள் தெரிவித்தனர்.
நடைபாதை வியாபரிகளுக்கு கடந்த காலத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் மட்டக்களப்பு மாநகரசபையினால் வழங்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

               

Post a Comment

0 Comments