Advertisement

Responsive Advertisement

கெட்டகாலம் கழிந்த பின்னர் 29ம் திகதி நாடு திரும்புகிறார் சந்திரிகா! - தீவிர அரசியலில் குதிப்பாராம்.

சோதிடரீதியாகத் தமக்குக் காலம் கூடாது எனக் கருதி அதனைத் தவிர்ப்பதற்காகக் கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் 29ஆம் திகதி நாடு திரும்புகிறார். அதற்குப் பின்னர் தமது அரசியல் வாழ்வு மிகப்பிரகாசமானதாகவும் வலுவானதாகவும் இருக்கும் என்ற சோதிடக் கணிப்பில் நம்பிக்கை கொண்டுள்ள அவர், நாடு திரும்பியதும் மீண்டும் தீவிர அரசியலில் குதிப்பார் என்று கொழும்புச் செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதில் அவர் ஆர்வம் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments