Home » » மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் -உலங்கு வானூர்தி மூலம் பூ மழை சொரியப்பட்டது

மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் -உலங்கு வானூர்தி மூலம் பூ மழை சொரியப்பட்டது

மட்டக்களப்பு  புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய புனராவர்த்தன பஞ்சகுண்ட அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு சுப வேளையில் இடம்பெற்றது.
இவ் ஆலய நிகழ்வானது கடந்த 2ஆம் திகதி ஆலய ஆரம்ப கிரிகை பூசைகளுடன் ஆரம்பமாகி , 6ஆம் 7ஆம் திகதிகளில் அம்பாளுக்கு  எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து இன்று காலை 09.00 மணிக்கு  சுப வேளையில் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வுகள் திருப்பழுகாமம் மாவேற்குடா பிள்ளையார் ஆலய  பிரதிட்டா பிரதம குரு சிவஸ்ரீ சு.கு.வினாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் விஷேட நிகழ்வாக  ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளுக்கு இனங்க கிழக்கு 23ஆம் படை தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா , மட்டக்களப்பு விமான படை தளபதி குருப் கேப்டன் பிரியதர்சன  மற்றும் முன்னாள் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் ஆகியோரின் ஆலோசனையோடு இலவசமாக உலங்கு வான் ஊர்தி வழங்கப்பட்டு , ஆலய கோபுரத்துக்கு கும்பாபிஷேகத்தின்போது வானில் இருந்து மலர்கள்  சொரியப்பட்டது.
இந் நிகழ்வில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டமை சிறப்பு அம்சமாகும் . தொடர்ந்து 12 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெற்று 19ஆம் திகதி 1008 சங்காபிஷேக பூசைகள் இடம்பெறும்.
ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் 22ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 25ஆம் திகதி புதன்கிழமை கல்யாணக்கால் வெட்டும் வைபவம் இடம்பெற்று, 27ஆம் திகதி  வெள்ளிக் கிழமை மாலை 04.00 மணிக்கு இடம்பெறும் தீ மிதிப்பு வைபவத்துடன்  ஆலய நிகழ்வுகள் நிறைவு பெரும் .
                 
                
               
               
              
               
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |