Advertisement

Responsive Advertisement

தேசிய தாய்கொண்டா சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரரும் வீராங்கனையும் சாதனை


தேசிய தாய்கொண்டா சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரரும் வீராங்கனையும் சாதனைபடைத்து மட்டக்களப்புக்கு பெருமைசேர்த்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி கொழும்பு டொறின்டன் அவனியுவில் உள்ள உள்ளக விளையாட்டரங்களில் நடைபெற்ற தேசிய தாய்கொண்டா சுற்றுப்போட்டியில் இந்த சாதனையினை படைத்துள்ளனர்.

ஆண்,பெண் தாய்கொண்டா சுற்றுப்போட்டியில் மூன்றாவது இடத்தினைப்பெற்று வெண்கலப்பதக்கத்தினைப்பெற்று இந்த சாதனையினை நிலை நாட்டி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மட்டுமன்றி கிழக்கு மாகாணத்துக்கே பெருமை சேர்த்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே வீரரான ஆர்.கிஷோத்,வீராங்கனையான செல்வி எம்.சரோஜினி ஆகியோரே இந்த சாதனையினை படைத்துள்ளனர்.

இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வலிமை மிக்க அணிகள் பங்குகொண்டபோதிலும் அவர்களுடன் போட்டியிட்டு இந்த சாதனையினை நிலைநாட்டியுள்ளனர்.

இவர்களை விளையாட்டுத்திணைக்களத்தின் விளையாட்டு உத்தியோகத்தர்களான பிரசாத்,ரூபன் ஆகியோர் வழிநடத்தியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம பயிற்றுவிப்பாளருமான கே.ரி.பிரகாசின் வழிகாட்டலின் கீழ் குகன் மாஸ்டர் உட்பட சிறந்த பயிற்றுவிப்பாளர்களின் பயிற்சிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சர்வதேச ரீதியில் வீரவீராங்கனைகள் பெருமை சேர்த்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 15வருடங்களாக வீரவீராங்கனைகளுக்கு கராத்தே, தாய்கொண்டா போன்ற கலைகளை சிறந்த முறையில் பயிற்றுவித்துவருகின்றது.

அத்துடன் மாவட்ட மாகாண மட்ட போட்டிகளில் அதிகளவில் இந்த சோட்டாக்கன் கராத்தே சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியே மாணவர்கள் இவ்வாறான விளையாட்டுத்துறையில் பிரகாசித்துவருகின்றனர்.

இதேநேரம் தேசிய தாய்கொண்டா சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த வீர,வீராங்கனைகளை நேரில் சென்று முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வாழ்த்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மட்டுமன்றி கிழக்கு மாகாணத்துக்கே பெருமை சேர்த்துள்ள அவர்களை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து அவர்களை உச்சாகப்படுத்தவேண்டியது அனைவரது கடமையாகும் என சந்திரகாந்தன் தெரிவித்தார்.








Post a Comment

0 Comments