Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வீரர்கள் தேசிய ரீதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் சாதனை


தேசிய ரீதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பினை சேர்ந்த வீரர்கள் சாதனைகளை படைத்து மட்டக்களப்புக்கு பெருமைசேர்த்துள்ளனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நொச்சிமுனை,சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக வீரர்களே இந்த சாதனையினை படைத்துள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சினால் நுவரேலியாவின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் 84கிலோ போட்டியில் எஸ்.ரொயிஸ்டின்,96கிலோ எடை போட்டியில் ஷேன் பல்தாஷர் ஆகியோர் மூன்றாம் இடத்தினை பெற்று இந்த சாதனையினை படைத்துள்ளனர்.

விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான போட்டியில் பிரதேச செயலக மற்றும் மாவட்ட,மாகாண மட்ட போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டு இந்த சாதனையினை படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரனின் வழிகாட்டலில் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான வேலு.திருச்செல்வத்தினால் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகம் கடந்த காலத்தில் மாகாண,தேசிய ரீதியில் பல வீரர்களை பிரகாசிக்கசெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாதனைபடைத்து மட்டக்களப்புக்கு பெருமைசேர்த்துள்ள இவர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,உதவி அரசாங்க அதிபர் ரங்கநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளா வி.தவராசா,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,உதவி ஆணையாளர் தனஞ்சயன், பொறியியலாளர் அச்சுதன் ஆகியோர் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.











Post a Comment

0 Comments