மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெருகல் ஆற்றிலிருந்து கதிரவெளி, புச்சாக்கேணியைச் சேர்ந்த து.கோணலிங்கம் (வயது 38) என்பவர் இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். வெருகல், கல்லரிப்பு பகுதியில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த இவர், நேற்று முன்தினம் வெருகல் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். இவரை கண்டுபிடித்துத் தருமாறு வாகரைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தற்போது வாகரை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments