வவுணதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “கிராமம் கிராமமாக வீடு வீடாக" எனும் தொனிப்பொருளுக்கமைவான நடமாடும் சேவையின்போது வவுணதீவு பொலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் ஏற்பாட்டில் பாதசாரிகள் மற்றும் வாகனங்களைச் செலுத்துவோர் எவ்வாறு செயற்படவேன்டும், எவ்வாறு வீதியால் பயணிக்க வேன்டும் என்பதுபற்றிய விழிப்புணர்வு செயலமர்வு கன்னங்குடா பாடசாலையில் நேற்று 17ம் திகதி இடம்பெற்றது.
இவ் விழிப்பூட்டல் செயலமர்வு கன்னங்குடா மகாவித்தியாலய மாணவர்களின் ஒரு தொகுதியினருக்கு இடம்பெற்றது.
இதன்போது, உப பொலீஸ் பரிசோதகர் ஜெயலத், பொக்குவரத்து பொலீஸ் பிரிவின் சார்ஜன் ஜெயசேன,பொலீஸ் உத்தியோகத்தர் திசாநாயக்க, மக்கள் தொடர்பாடல் பிரிவு சார்ஜன் புனிதகுமார் மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்,சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் போன்றோர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்


0 Comments