நாடாளுமன்றில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததால், கோபித்துக் கொண்டு பிரதமர் டி.எம்.ஜயரட்ன அவையை விட்டு வெளியேறிச் சென்றார். ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நேற்று நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் பிரதமருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அதனால் ஆத்திரமுற்ற பிரதமர் அவையை விட்டு வெளியேறிச் சென்றார். பிரதமருக்கு முன்னதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
|
தமக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தையே அமைச்சர் டக்ளஸிற்கு வழங்கப்பட்டதாக பிரதமர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அண்மைக்காலமாக பிரதமர் அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணித்து வருவதாகவும் அண்மையில் சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
0 Comments