Home » » காரைதீவுபிரதேச சபையின் பட்ஜெட் புதிய தவிசாளரின் கன்னி அமர்வில் இன்று நிறைவேற்றம்.!

காரைதீவுபிரதேச சபையின் பட்ஜெட் புதிய தவிசாளரின் கன்னி அமர்வில் இன்று நிறைவேற்றம்.!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காரைதீவு பிரதேசசபை வரலாற்றில் இருமுறை தோற்கடிக்கப்பட்டு தவிசாளரின் பதவி பறிபோகக்காரணமாயமைந்த 2014ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று புதன்கிழமை வருகைதந்த அனைத்து உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மூன்றாவது தவிசாளரான யோகரெத்தினம் கோபிகாந் நேற்று 25ஆம் திகதி புதன்கிழமை சுபநேரத்தில் தமது கன்னிஅமர்விற்கு தலைமைதாங்கி பட்ஜெட்டைச் சமர்ப்பித்தார்.
சபையில் சமுகமளித்திருந்த த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் சு.பாஸ்கரன்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச்சேர்ந்த எம்.எ.பாயிஸ் ஆகியோர் தவிசாளரின் பட்ஜெட்டுக்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்துரையாற்றினர்.
அதன்படி வாக்கெடுப்புக்குவிடப்பட்டபோது தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர். தென்படி பட்டிஜட் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையில் பொதுபலசேனா அரசாங்கம் என்பனவற்றிற்கு எதிராக கண்டனத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜ.நா.விசேட விசாரணைக்குழுவை நாட்டிற்குள் அனுமதிக்கவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 
வரலாறு 
2006 இல் உருவான கன்னிபிரதேசசபைக்கு தவிசாளராக நடராசா ஜீவராசா தெரிவாகியிருந்தார். 2011ல் உருவான இரண்டாவது சபைக்கு செல்லையா இராசையா தவிசாளராக தெரிவாகியிருந்தார்.கடந்தாண்டு பட்ஜெட் இருமுறை தோற்கடிக்கப்பட்டமையினால் அவர் 31.12.2013 இல் பதவி இழந்தார்.அவரது இடத்திற்கு யோகரெத்தினம் கோபிகாந் கட்சியால் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
அதன்படி வரலாற்றில் மூன்றாவது தவிசாளராகப்பதவியேற்கும் கோபிகாந் 31வயதுடைய விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராவார்.அண்மையில் திருமணமான இவர் கடந்ததேர்தலில் த.தே.கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு 1693 வாக்குகளைப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழத்தேசியக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இயங்கிவரும் காரைதீவு பிரதேசசபை வரலாற்றில் 2006 தேர்தலில் கன்னிப்பிரதேசசபைக்கு த.தே.கூட்டமைப்பைச்சேர்ந்த ந.ஜீவராசா தவிசாளராகவும் வீ.கிருஸ்ணமூர்த்தி உபதவிசாளராகவும் கே.ஸ்ரீநவநாதன் ச.பகீரதன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச்சேர்ந்த எம்.எச்.எம்.இஸ்மாயில் ஆகியோர் உறுப்பினர்களாகவும்தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். அச்சபைக்கு ஒருவருடம் நீடித்து வழங்கியிருந்தமையினால் 2011 வரை 05வருடங்கள் அவர்களால் சேவையாற்றமுடிந்தது.
இரண்டாவது சபைக்கான தேர்தல் 2011இல் நடைபெ;றறபோது  த.தே.கூட்டமைப்பின்சார்பில் செ.இராசையா தவிசாளராகவும் கே.தட்சணாமூர்த்தி உபதவிசாளராகவும் சு.பாஸ்கரன் வை.போகிகாந் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச்சேர்ந்த எம்.எ.பாயிஸ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.இச்சபையின் காலம் 2015 நடுப்பகுதியில் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து த.தே.கூட்டமைப்பின் சார்பில் 04 உறுப்பினர்களும் ஸ்ரீல.முகா.சார்பில் ஒரு உறுப்பினரும் தெரிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்புவிழா
பதவியேற்புவிழா பிரதேசசபை உறுப்பினர் சு.பாஸ்கரன் தலைமையில் சபாமண்டபத்தில் கடந்த 11ம் திகதி கோலாகலமாக நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் சிறப்புவிருந்தினராகக கலந்துகொண்டார்.முன்னதாக சமாதானநீதிவான் எல்.ரமேஸ்குமார் முன்னிலையில் புதிய தவிசாளர் கோபிகாந் சத்தியப்பிரமாணம் எடுத்தார்.
விழாவில் கன்னிச்சபையின் தவிசாளர் ந.ஜீவராசா உபதவிசாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காரைதீவு பிரதேசசபையின் தவிசாளராக யோகரெத்தினம் கோபிகாந்தை நியமித்துள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்ரமரத்ன 30.05.2014 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியிருந்தார்.
30.05.2014 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச்சட்ட அறிவித்தலின் பிரகாரம் இவ்வறிவித்தலை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |