வவனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கிய சிறுவன் மூளை இறப்புக்குள்ளாகியுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை அதிகாலை கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற பேரூந்தில் பயணித்த கிளிநொச்சியை சேர்ந்த எஸ்.மதுசன் என்ற ஆறு வயது சிறுவன்- வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலுள்ள உணவகமொன்றிற்கருகில் பேரூந்து நிறுத்தப்பட்டபோது இறங்கி வீதியைக் கடக்க முற்பட்டுள்ளான்.
|
அப்போது எதிர்த்திசையால் வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் - வவுனியா பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். எனினும் சிறுவனின் மூளை இறந்துவிட்டதாக தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர் சிறுவனுக்கு தொடர்ந்தும் செயற்கை சுவாசமளித்து வருவதாக தெரிவித்தார்.
|
0 Comments