Advertisement

Responsive Advertisement

இன்று மதியத் தொழுகைக்குப் பின்னர் வன்முறைகள் வெடிக்கலாம் என அச்சம்! - நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிப்பு.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் குழப்பத்தை தோற்றுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட சில அமைப்புகள் தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம், நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி சில அடிப்படைவாத குழுக்கள் மீண்டும் ஒரு மோதலை உருவாக்க முயன்று வருவதாக தெரியவருகிறது.இன்று ஜூம்ஆ தொழுகை யின் பின்னர் இவ்வாறான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடப் போவதாக தகவல்களும் கிடைத்துள்ளன.
எனவே, முஸ்லிம் மக்கள் அனைவரும் வதந்திகளையோ அல்லது அடிப்படை வாதிகளின் தூண்டுதல்களுக்கோ ஆளா காமல் மிக அமைதியாக தமது மதக் கடமைகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரிலுள்ள அமைப்பு ஒன்று உட்பட அடிப்படைவாத அமைப் புகள் சில துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும் பேஸ்புக் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றன.
அளுத்கம, பேருவளை, தர்காநகர் போன்ற பிரதேசங்களில் நடைபெற்ற சம்பவங்களை காரணம்காட்டி மக்களை தூண்டிவிடும் முயற்சியில் இந்த அடிப்படைவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இவைகளுக்கு ஏமாற வேண்டாமென்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடவியலாளர் மாநாடு நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன், பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் நடைபெற்ற சம்பவம் இறுதியானதும் முதலானதும் அல்ல. இவ்வாறான ஒரு சம்பவம் மீண்டும் எங்கும் இடம்பெறக்கூடாது என்பதே அரசாங்கத்தின் நோக்கம். அனைத்து மக்களும் இதனை தடுப்பதற்கு முன்வர வேண்டும்.நடந்து முடிந்த சம்பவங் களை மையமாக வைத்து சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதற்கு சில சக்திகள் முயன்று வருகின்றன. எவ்வாறாயினும் இந்த அடிப்படைவாத போக்கை நிறுத்த நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் பின்னணியில் இருந்து குழப்புவதற்கும் மோதல்களை உருவாக்குவதற்குமான பாவச் செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். அவர்களது முயற்சிகளுக்கு எள்ளளவேனும் அனு சரணை வழங்க வேண்டாமெனவும் நாட்டில் ஒரு குழப்ப நிலையை உருவாக்க இடமளிக்க வேண்டாமென்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக் கொண்டார்.
இன்று முஸ்லிம்கள் ஜூம்ஆ தொழுகைக்காக செல்வதை சிலர் தவறாக பயன்படுத்த முயன்று வருகிறார்கள். எனவே, அவர்களது சூழ்ச்சிகளுக்கு ஆளாக வேண்டாம் என்றும் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் கேட்டுக் கொண்டார். கொழும்பு நகரில் போதிய பொலிஸ் பாதுகாப்பு இன்று சகல பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் 12ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெற்ற சம்பவங்களில் 7 முஸ்லிம்கள் அடங்கலாக 55பேர் கைதாகியுள்ளனர். 35பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மூவர் உயிரிழந் துள்ளனர். இந்த மூவரும் துப்பாக்கிச் சூட்டு காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் தாக்குதல் மற்றும் வெட்டுக் காயங்களினாலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments