Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது கழிவு ஓயில் வீச்சு! - யாழ்.பல்கலைக்கழகத்தினுள் மோதலை ஏற்படுத்த முயற்சி

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது இன்று காலை கழிவு ஓயில் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்-முஸ்லிம் மாணவர்களிடையே குழப்பத்தைத் தூண்டுவதற்கு சில மறைமுக கரங்கள் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என பல்கலைக்கழக மணவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அளுத்கம மற்றும் பேருவளையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினைக் கண்டித்து, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்புக்களையும் இணைத்து நேற்று எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தது.அந்தப் போராட்டத்திற்கு எதிரொலியாக இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments