மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தினை உலுக்கிய இரட்டைக்கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர் தவிர்ந்த ஏனைய மூவர்மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2013-04-07ஆம் திகதி செங்கலடி –பதுளை வீதியில் உள்ள வீட்டில் வைத்து கணவன்-மனைவி இருவர் கோரமாக கொலைசெய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குறித்த தம்பதியரின் மகள் உட்பட நான்கு பேர் ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பிலான வழங்குகள் ஏறாவான் நீதிமன்றில் நடத்தப்பட்டுவந்த அதேவேளை பிணை கோரப்பட்ட வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றிலும் தொடரப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொண்டபோது இரண்டாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி பிரியந்தியும் மூன்றாம் நான்காம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி பிரேம்நாத்தும் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கினை மேல் நிதிமன்ற நீதிபதி திருமதி சந்திரமணி விஸ்வலிங்ம் விசாரணை செய்தார்.
இதன்போது இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் பின்னர் முதலாம் எதிரி தவிர்ந்த ஏனைய மூவரையும் பிணையில் செல்ல சில நிபந்தனைகளுடன் நிதிபதி அனுமதிவழங்கியதாக சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்தார்.
இரண்டாம் எதிரி 75 ஆயிரம் ரூபா காசுப்பிணையும் 50இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் மூன்றாம் நான்காம் எதிரிகள் 50ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் 10இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல அனுமதியளித்தார்.
அத்துடன் மூவரும் வெளிநாடு செல்வதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
0 Comments