Home » » மட்டப்பளப்பு குருக்கள்மடம் ஜெகதா செல்வராசா ,அவர்களின் 'நாடகக்கலையின் இசையின் பங்களிப்பு' பற்றி பத்திரிகையில் வெளிடப்பட்ட சஞ்சிகை

மட்டப்பளப்பு குருக்கள்மடம் ஜெகதா செல்வராசா ,அவர்களின் 'நாடகக்கலையின் இசையின் பங்களிப்பு' பற்றி பத்திரிகையில் வெளிடப்பட்ட சஞ்சிகை

நாடகக்கலையின் இசையின் பங்களிப்பு.

நாடகக்கலை என்பது செய்கை நிலையினை சித்தாpப்பதாகத் திகழ்கிறது. அந்தவகையில் நாடக அரங்க ஆற்றுகையின் பொழுது பல்வேறு அரங்க துணைக் கூறுகள் அரங்க ஆற்றுகையின் வெற்றியில் பங்களிப்பு செய்வதனைக் காணக்கூடியதாக உள்ளது. அரங்க ஆற்றுகை என்பது நாடகரங்க மூலக்கூறுகள் அனைத்தையும் இணைத்து ஓhpடத்தில் ஆற்றுகையை மேற்கொள்ள வசதியாகவும் ஆற்றுகையினை மேலும் அழகுபடுத்துவதற்காகவும் கவா;சியை உண்டுபண்ணுவதற்காகவும் மேற்கொள்ளப் படுகின்ற பல்வேறு நடவடிக்கையை ஒன்றிணைக்கின்ற செயற்பாடாகும். இந்தவகையில் அரங்க மூலக்கூறுகளாக அழங்க இசை, ஒலி ஒளி அமைப்பு, ஒப்பனை, வேடஉடையமைப்பு, காட்சி விதானிப்பு போன்றவற்றைக் கூறலாம். இந்தவகையில் நாடக அரங்க ஆற்றுகையில் இசையானது மிக முக்கிய இடத்தினை வகிப்பதைக் காணலாம்.
அரங்கில் இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட ஒலிகளின் தொகுப்பாதும். நாடகங்களில் தொழிற்படும் பல்வேறு மூலகங்களில் ஒன்றாக இசை காணப்படுகிறது. சாதாரணமாக இசையைப் பயன்படுத்துவதற்கும் அரங்கிற்க்கு இசையைப் பயன்படுத்துலதற்க்கும் வேறுபாடு உண்டு. நாடக இசை என்பது இசையை நாடகமயப் படுத்தலாகும். நாடகத்தின் இசையானது மனித இசை, இசைக்கருவிகளின் இசை போன்றவற்றின் மூலம் பெறப்படுகின்றது. இவை நாடகங்களில் பாடலாகவும் பின்னணி இசையாகவும் தொழிற்படுகின்றது. 
ஆரம்ப காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் நாடகத்திற்கான உயிரோட்டத்தைக் கொடுத்து அதன் அழகிய வினை வெளிப்படுத்தும் சாதனமாக இசை அமைந்துள்ளது. நிஜத்தில் இருப்பவரை தன் உலகிற்க்கு இழுத்துச் செல்கின்ற ஆற்றல் இசைக்குண்டு. இந்திய கதகழி, தெருக் கூத்து, மோகினி ஆட்டம், குச்சுப்பிடி, சீன பீக்கிங்ஒபேரா போன்ற கலை வடிவங்களில் இசையே உயிh; நாடியாக உள்ளது. 
நாடகத்தின் செயலால் வெளிப்படுத்த முடியாதவற்றை, குறிப்பால் வெளிப்படுத்த முடியாதவற்றை இசையாக வெளிப்படுத்துவதின் மூலம் பாh;வையாளா;களிடையே அதுபற்றிய மனப்பதிவினை இலகுவான ஏற்படுத்திக் கொள்வதற்கு இசை பயன்படுத்தப்படுகிறது. நாடகத்தில் பொதுவாக இரண்டு வகையான இசை முக்கியம் பெறுகின்றது. அவையாவன 
1. பண்பிசை
2. செயலிசை
பண்பிசை என்பது நாடகத்தின் தனித்துவத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப் படுகின்ற இசையைக் குறிக்கும். இசை மூலமாகவே நாடகக்கதை எடுத்துச்செல்லப் படும். இத்தன்மையினை இசை நாடகங்களில் கண்டுகொள்ள முடியும். செயலிசை என்பது நாடகத்தின் மனனிலை, உணா;ச்சிகள், காட்சிகழுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்தல் போன்ற பல அமசங்களை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப் படும் இசையினைக் குறிக்கும். 
நாடகங்களில் இசையானது பல்வேறு நோக்கங்களுக்காகவும் பின்னணி இசையாகவும் பாடலாகவும் பயன்படுதப் படுகிறது. அந்தவகையில் கரு இசை, மநோ உணர்வு இசை, பின் இசை, குறியீட்டு இசை, இசை விளைவு என பல நோக்கங்களுக்காக நாடகங்களில் இசை பயன்படுத்தப்படுகிறது.
நாடகத்தின் மையக்கருத்தை வெளிப்படுத்துகின்ற ஆற்றுகின்ற இசையாக கருவினை வெளிப்படுத்தும் இசையினைக் கூறலாம். ஒரு நிலையில் நாடகம் முழுவதும் இக் கரவிசை நாடகங்களில் தொழிற்படும். ஒரு நாடகத்தினை காவிச் செல்லும் இசையாகவும் கரு இசையினைக் கருதமுடியும். நாடகத்தின் மன நிலையை வெளிப்படுத்தவும் அழுத்திக் காட்டவும் மனோ உணா;வு இசை பொpதும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக சில இசைக்கருவிகள் உணா;வுகளை விரைவில் தூண்டவல்லன.(உடுக்கு - பக்த்தி, எழுற்ச்சி)
மேலும் நாடகங்களில். பாத்திரங்களின் குணப்பண்புகளை வெளிப்படுத்திக்காட்டவும் பாத்திரங்களது அசைவியக்கத்தினை வலுப்படுத்தவும் இசையானது பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக மிருக பாத்திரங்களின் வருகைக்கு பயன்புடுத்தும் இசையினைக் குறிப்பிடலாம். 
மேலும் பண்பாட்டின் அடித்தளத்தில் நின்று நாடகக்கலையினை வெளிப்படுத்தவும், பாத்திரங்களின் உரையாடலுக்கு அழுத்தம் கொடுக்கவும் இசையானது பயன்படுகின்றது. உரையாடல்களில் வரும் உணா;வு மாற்றங்கள், ஓசை நயங்கள், ஏற்ற இறக்கங்கள் என்பவற்றினை மெருகூட்டுவசதற்க்கு இசை பயன்னடுத்தப்படுகிறது. நாடகத்தின் குறியீட்டம்சங்களை வெளிப்படுத்தவும் இசை பயன்னபுத்தப் படுகிறது. உதாரணமாக நாடகத்தில் ஒருவா; இறந்ததைக் காட்டுவதற்க்கு பறை ஒலி எழுப்புவதைக் குறிப்பிடலாம்.
மேலும் நாடகத்தின் களத்தினை வெளிப்படுத்தவும் பல்வேறு ஒலிகளை எழுப்பவும் இசையானது பயன்படுத்தப்படுகின்றது. மிருகங்கள், பறவைகள், இயந்திர ஒலிகள் என சா;ந்தப்பத்திற்கு ஏற்ப்ப உணா;வுகளை வெளிப்படுத்த இசை உதவுகின்றது. இதனால் நாடகமும் மெருகூட்டப்படுகின்றது. 
இசையால் வசமாகா இதயம் எது…. என்ற பாடல் வாpக்கு ஏற்றாற் போல் இசையானது நாடகத்தினையும் மெருகேற்றி விடுகின்றது. கவர்ச்சி கரமான புலக்காட்சியுடன் இனிமையான ஒலிகழும் சேரும் போது நாடகம் அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக மாறிவிடுகின்றது. எனவே பல கலைகள் சங்கமிக்கும் கலையான நாடகக்கலையை சசையானது மிக முக்கிய பங்கினை வெளிப்பதுத்துகின்றது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

ஆக்கம்
செ. ஜெகதா
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகம்
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |