மட்டக்களப்புக் கல்லடியில் பொது நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா சற்று முன்னர் திடீரென மயங்கி வீழ்ந்தார். எனினும் அருகில் இருந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் அவரை சரியவிடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். சற்று நேரத்தில் ஆசுவாசப்படுத்தியதன் பின்னர் அவர் வழமை நிலைக்குத் திரும்பினார் எனக் கூறப்படுகிறது. கல்லடி துளசி மண்டபத்தில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றில், சுமார் 45 நிமிட நேரம் உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்திலேயே மாவை எம்.பி. மயங்கிச் சரிந்தார்.
அச்சமயம் அருகில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், அரியநேந்திரன், சுமந்திரன், செல்வராஜா மற்றும் மகாண சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர். மாவை எம்.பி. சுமுக நிலைக்கு வந்ததை அடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு கிளிநொச்சியில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய போதும், மாவை சேனாதிராஜா எம்பி மயங்கி வீழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments