இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க, இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்திய போதிலும், தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் பிடிபட்ட 78 இந்திய மீனவர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்களையும் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதிபதி ஆனந்தி கனகரெட்ணம் உத்தரவிட்டார். இந்திய மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்களும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
|
இதேவேளை - நெடுந்தீவுக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார். நேற்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் இன்று ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இந்திய மீனவர்கள் பயன்படுத்திய வலைகள் மற்றும் உபரணங்கள் என்பன நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
![]() ![]() ![]() |
0 Comments