Home » » குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)

குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)

மன உறுதியுடன் உழைத்திடும் மேஷராசிஅன்பர்களே!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்தார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடை ஏற்பட்டு இருக்கும். இந்த நிலையில் குரு பகவான் 3-ம் இடத்திலிருந்து   4-ம் இடத்துக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. குருபகவான் 4-ல் இருக்கும்போது மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. சோதனைகளை கொடுத்தாலும் அது உங்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்வார் என்பதை மறப்பது கூடாது. மாணவனுக்கு ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பது போல குரு உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பார். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் இப்போதைய நிலையை விட மேலும் வாழ்வில் முன்னேற்றம் காண குருவின் பார்வை பலம் உங்களுக்கு துணை செய்யும். கோச்சார பலனை பார்க்கும் போது மற்ற கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுக்க வேண்டிய திருக்கும். பணப்புழக்கம் இருக்கும். அதே நேரம் செலவும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். தேவை அனைத்தும் கிடைக்கும். வீடு, மனைவாங்க யோகம் கூடி வரும். கணவன்,மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை குறையும். குடும்பத்தில் தேவையான வசதிகள் இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபட வாய்ப்புண்டு. அதுவும் கூட உங்களின் நல்லதுக்குத் தான். புதிய வீடு வாகனம் வாங்க கடின முயற்சி தேவைப்படும். உறவினர்கள் வகையில் அடிக்கடி பிரச்னை உருவாகலாம். ஆகஸ்டு மாதம் சுக்கிரனின் பலத்தால் உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில் குடும்ப குழப்பம் அனைத்தும் படிப்படியாக நீங்கும். புதனால் எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சி நடக்கும். சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். டிசம்பருக்கு பிறகு மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.

தொழில், வியாபாரம்: போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அனைத்தும் மறையும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வெகு தூர அலைச்சல் உருவாகலாம். பண விரயம் ஏற்படலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். அதே போல் எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். சிறு தொழில் செய்பவர்கள் சீரான வருமானம் காணலாம். தொழிலை பெருக்க வழிவகை தெரியாமல் சிலர் தவிப்பர்.

பணியாளர்கள்: உத்தியோகத்தில் தொடர்ந்து சீரான வளர்ச்சி நிலை இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். அதிக முயற்சி செய்தால் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்கள் வகையில் உதவி கிடைக்காது. செப்டம்பர் மாதத்தில் புதனால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கூலி தொழில் செய்பவர்களுக்கும் தேவைக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். 

பெண்கள்:  கணவரின் அன்பு கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குடும்ப நன்மைக்காக எதையும் தியாகம் செய்வர். 

கலைஞர்கள்:  புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக பெற முடியாது. விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே முன்னேற்றத்திற்கு வழியுண்டு. எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். ஆகஸ்டில் சுக்கிரனின் பலத்தால் தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். அவரால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள்:  உழைப்புக்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். ஆசிரியர்களின் அறிவுரை பயன் கொடுக்கும்.

விவசாயிகள்:  அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். கால்நடை மூலம் சீரான வருமானம் இருக்கும். பயறு வகை மூலம் நல்ல மகசூல் வரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைவிட்டு போகலாம். வழக்கு விவகாரத்தில் சாதகபலன் கிடைக்காது. சிலருக்கு பாதகமாகவும் அமைய வாய்ப்பு உண்டு. புதிய வழக்குகள் எதிலும் சிக்க வேண்டாம். 

உடல்நலம்:  கேதுவால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். டிசம்பருக்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான உபாதை உண்டாகலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். பயணத்தின் போது கவனம் தேவை. சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். எனவே சற்று ஒதுங்கி இருக்கவும். 

குரு அதிசார பலன்!

குருபகவான் டிச.3ல் அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22 வரைஅதில் இருப்பார். இந்த காலத்தில் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்!

சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும். சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும், சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி 
செய்யுங்கள். வசதி படைத்த தொழில் அதிபர்கள் ஏழைகளுக்கு ஆடு வளர்க்க உதவி செய்யலாம்.

பரிகாரப்பாடல்!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) 60/100 பார்வையால் பலனுண்டு பதவியில் சிக்கலுண்டு!

எதையும் சாதிக்கும் வல்லமையுள்ள ரிஷப ராசிஅன்பர்களே!

கடந்த ஓர் ஆண்டாக குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து பல்வேறுநன்மைகளைத் தந்து கொண்டு இருந்தார். மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும்.இவ்வளவு நன்மைகளை தந்து கொண்டிருந்த குரு, 2-ம் இடமான மிதுனத்தில் இருந்து 3-ம் இடமான கடகத்துக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டது என்பது ஜோதிட வாக்கு. அதாவது துரியோதனனின் ஜாதகத்தில் 3-ல் குரு இருக்கும்போது அவனது படை தோல்வி அடைந்தது என்பதாகும். அந்த அளவுக்கு மோசமான பலன்கள் உங்களுக்கு நடக்குமோ என்ற அஞ்ச வேண்டாம். ஏனெனில், துரியோதனன் கதை வேறு. அவன் பல அநியாயங்கள் செய்தவன். அந்த சூழ்நிலை வேறு, இன்றைய உங்களின் நிலை வேறு. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும்போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படியானால், குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9-வது வீட்டை பார்க்கிறார். குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. எனவே குருவின் பார்வைகளால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எதிர் இடையூறுகளை உடைத்தெறிவீர்கள். அதோடு நாம் மற்ற கிரகங்களின் நிலையையும் கொண்டு பலனை கணக்கிட வேண்டும். கேதுவால் எடுத்த காரியம் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். அதே நேரம் வீண்விவாதங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பது நல்லது. டிசம்பருக்கு பிறகு எடுத்த காரியத்தில் சிறுசிறு தடைகள் வரலாம். சிலர் ஆடம்பர பொருட்களை வாங்குவர். குடும்பத்தில் வசதிகள் மேம்படும். கணவன்-மனைவி இடையே சிறு சிறு மனக்குழப்பங்கள் வரலாம். சுபநிகழ்ச்சிகள் குருவின் பார்வையால் நடக்கும். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் குடும்பத்தை வெளியூர் மாற்றும் நிலை உருவாகும்.

தொழில், வியாபாரம்: வீட்டில் சிற்சில பிரச்னைகள் இருந்தாலும் தொழிலில் எந்த பின்னடைவும் இருக்காது. நல்ல வளர்ச்சி இருக்கும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை 
ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம். வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெறுவர். ஜுன்,ஜூலை மாதத்தில் அரசு அதிகாரிகளின் உதவியும், சலுகைகளும் கிடைக்கும். 

பணியாளர்கள்: அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும், அந்த பளுவுக்கும் உழைப்புக்கும் ஏற்ற வருமானம் இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களிடம் உரசினாலும் அனுசரித்து போகவும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வழக்கமான சம்பள உயர்வுக்கு எந்த தடையும் இல்லை. நவம்பர்,டிசம்பர் மாதத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வசதிகள் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், வக்கீல்கள் நற்பெயரோடு பண வரவும் காண்பர்.

பெண்கள்: குடும்பத்தில் அவ்வப்போது பூசல்கள் வரத்தான் செய்யும். அப்போது விட்டுக் கொடுத்து போவது நல்லது. உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்குவீர்கள். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவம்பர், டிசம்பர் மாதத்தில் குடும்ப பிரச்னை மறையும். எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். 

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்களை பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். பண வரவு குறையாது. போட்டி பலமாக இருக்கும். ஜுன்,ஜூலை மாதத்தில்அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். 

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகளும் பொதுநல சேவகர்களும் ஓரளவே பலன் பெற முடியும். முந்தைய பதவி  தொடர்பான சிக்கல் வரலாம்.

மாணவர்கள்: படிப்பில் சீரான வளர்ச்சி இருக்கும். குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். எனவேசுறுசுறுப்பை வரவழைத்து படியுங்கள். 

விவசாயிகள்: சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவார்கள். நவீன விவசாயத்தை பயன்படுத்தி விளைச்சலை பெருக்கலாம். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 

உடல்நலம்: டிசம்பர் மாதத்தில் உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். இந்த மாதம் சனிபகவான் இடம் மாறுவதால், உங்கள் கையிருப்பு பணத்தை நிரந்தர வைப்பு தொகையில் சேர்க்கவும்.

குரு அதிசார பலன்!

இந்த நிலையில் குருபகவான்  டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம் பெற்று  கடகத்திலிருந்துசிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரைஅதில் இருப்பார் . இதனால் இந்த அதிசாரக் காலத்தில் உங்களது ஆற்றல்  மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை  மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.  பகைவர்களின் 
சதி உங்களிடம் எடுபடாது.  அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.

பரிகாரம்!

குரு பகவானுக்கு முல்லை மலர் மாலை அணிவித்து அர்ச்சனை செய்யுங்கள். ராகு சிறப்பாக இல்லாததால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை செய்யுங்கள். டிசம்பர்16 முதல் ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். காலையில் விநாயகரை வணங்குங்கள். முடிந்தால் பழநி சென்று வாருங்கள். மேலும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஏழை குழந்தைகளுக்கு படிப்பதற்கு இயன்ற உதவியைச் செய்யவும்.

பரிகாரப்பாடல்!

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றிஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்சேவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி போற்றி

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) 75/100 (பெரிய லாபம் சிறிய பிரச்னைகள்!

மதி நுட்பத்துடன் பணியாற்றும் மிதுன ராசிஅன்பர்களே!

உங்கள் ராசியில் இருந்த குரு பகவான் குடும்பத்தில் பல பிரச்னைகளை உருவாக்கி இருப்பார். சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை கூட ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் இப்போது குரு பகவான் உங்கள் ராசியை விட்டு 2-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது மிகவும் உகந்த நிலை. வாழ்வில் எண்ணற்ற நன்மைகள் படிப்படியாக கிடைக்கும். உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் மறைமுக சூழ்ச்சி இனி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலையும் உருவாகும்.  குருபகவான் மட்டுமின்றி முக்கிய கிரகங்களான சனி பகவானும் சாதகமாக இருப்பதால் முன்னேற்றத்துக்கு எளிதில் வழி காணலாம். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பொருளாதார வளம் சிறப்படையும். தேவை  அனைத்தும் பூர்த்தியாகும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் செல்வாக்கு மேம்படும். அக்கம் பக்கத்தினர்  பெருமையாகப் பேசும் விதத்தில் செயல்படுவீர்கள். பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சி  கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும். புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போதுள்ள வீட்டை விட நல்ல வசதி மிகுந்த வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டாகும். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் நற்சுகம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். பொருளாதார வளம் மேம்படும். வீடுமனை வாங்கலாம். 

தொழில், வியாபாரம்: தொழிலதிபர்கள், வியாபாரிகள் உற்சாகத்துடன் செயல்படுவர். கடந்த காலத்தை விட வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். டிசம்பருக்கு பிறகு புதிய தொழிலை தொடங்கலாம். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். தொழிலாளர்களின் ஆதரவும் நல்ல விதத்தில் அமையும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். வாடிக்கையாளர்கள் உங்களிடம் நன்மதிப்பை வைத்திருப்பர். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் கடந்த காலத்தில் மந்த நிலையில் இருந்திருப்பீர்கள். அந்த பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். வேலையில் இருந்த வெறுப்புணர்வு மாறி ஆர்வம் பிறக்கும். வேலையில் திருப்தியும், தன்னம்பிக்கையும் பிறக்கும். வேலைப்பளு வெகுவாக குறையும். புதிய பதவி வர வாய்ப்பு உண்டு. சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். கோரிக்கைகள் நிறைவேறும். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். 2015-ஏப்ரல்,மே மாதத்தில் பெண்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. அரசு வகையில் நன்மை உண்டாகும். போலீஸ், ராணுவத்தினர் சிறப்பான நிலையில் இருப்பர். 

பெண்கள்:  வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடைவர். விரும்பிய விதத்தில் புத்தாடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். குடும்பத்தில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் நிலவும். வீட்டுக்கு தேவையான வசதி அதிகரிக்கும். தம்பதியிடையே பாச உணர்வு மேம்படும்.  விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள்.   வேலைக்குச் செல்லும் பெண்கள் உயர்நிலையை அடைவர். நவம்பர் மாதத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மனதில் சோர்வும் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பணியில் உயர்வு கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 

கலைஞர்கள்: பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். புதிய ஒப்பந்தம் தாராளமாக கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். புகழ், பாராட்டு வந்து சேரும்.

அரசியல்வாதிகள்:  அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் வாழ்வில் நற்பெயர், புகழ் கிடைக்கப் பெறுவர். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள்:  இந்த ஆண்டு சிறப்பான பலனை காணலாம். கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கப் பெறுவர். விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பும் சிலர் பெறலாம்.

விவசாயிகள்: முன்னேற்றமான பலனை காணலாம். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கப் பெறுவர். நவீனக்கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர். 

உடல்நலம்:  உடல்நிலை சீராக இருக்கும். கேதுவால் பித்தம், மயக்கம் தொடர்பான உபாதை உண்டாகும். ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது. 

குரு அதிசார பலன்!

குரு பகவான் டிச. 3ல் அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். டிச.22 வரை அதில் இருப்பார். இதனால் இந்த காலத்தில் வீண் சண்டை, சச்சரவு உண்டாகும் என்றும், மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு. சற்று பொறுமையாகவும், விட்டு கொடுத்தும் போவது நன்மையளிக்கும். முயற்சியில் தடங்கலும் குறுக்கிடும். எந்த செயலையும் விடாமுயற்சியுடன் செய்ய வேண்டியிருக்கும். 

பரிகாரம்!

ராகு, கேது சாதகமற்ற நிலையில் உள்ளனர். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை அம்மனை எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுங்கள். பவுர்ணமியன்று விளக்கு ஏற்றி சிவபெருமானை வணங்குங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள்.  ஆதரவற்ற மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

பரிகாரப்பாடல்!

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைகண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) 65/100 (12க்கு 1பரவாயில்லே! குடும்பத்தைப் பிரிவீங்க!

எதையும் சாமர்த்தியாக செய்யும் கடகராசி அன்பர்களே!

குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்தார். அவர் பல்வேறு இடையூறுகளை கொடுத்து இருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கும். இப்படி பிற்போக்கான பலனைத் தந்த குருபகவான் தற்போது உங்கள் ராசிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இதுவும் அவ்வளவு சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவர் 12-ம் இடத்தில் இருந்ததுபோல கெடு பலன்களை செய்ய மாட்டார். ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் - என்று ஜோதிடத்தில் ஒரு வாக்கு உண்டு. அதாவது ராமரின் ஜாதகத்தில் 1-ம் இடத்தில் குரு இருக்கும்போது வனவாசம் செல்ல நேரிட்டது என்று கூறுகிறது. அந்த நிலை உங்களுக்கு வராது. காரணம் ராமரின் ஜாதக நிலைவேறு. உங்களுடைய கிரக நிலை வேறு. ராமர் தெய்வ அவதாரம். நாம் மனிதர்கள். பொதுவாக குரு 1-ம் இடத்தில் இருக்கும்போது கலகம், விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் கூறப்படுவது உண்டு. அதற்காக கவலைப்பட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வைக்கு கோடிநன்மை உண்டு. அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்ப்பார். அந்த மூன்று இடங்களும் சாதகமாக இருப்பது விசேஷம். இதனால் உங்களுக்கு வரும் இடையூறுகள் அனைத்தையும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். மேலும் பார்வைகள் மூலம் எண்ணற்ற நன்மைகளையும் தருவார்.முக்கிய கிரகமான ராகுவும் பல்வேறு நன்மைகளைத் தருவார். மேலும் குரு மற்றும் சனிபகவானின் பார்வைகளால் அதிக நன்மைகள் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். நல்ல பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். பொருளாதார வளம் இருந்துகொண்டே இருக்கும் என்பதால் தேவைகள் பூர்த்தியா கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.கணவன்- மனைவி இடையே அன்பு நீடித்தாலும், அவ்வப்போது மனக்கசப்புகள் வரத்தான் செய்யும். ஆனால் அவை  உங்கள் விட்டுக்கொடுக்கும் அணுகுமுறையால் விலகிவிடும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபச் செலவுகளால் கடன் வாங்கும் நிலை வரும். டிசம்பருக்கு பிறகு குடும்பத்தில் சிறு சிறு மனக்குழப்பங்கள் வரத்தான் செய்யும். பகையை ஏற்படுத்துவார்.

தொழில், வியாபாரம்: முன்னேற்றப்பாதையில் செல்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.தொழிலில் லாபம் குறையாது. அதிகமாக அலைச்சல் இருக்கும். ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். அரசின் உதவி அவ்வளவு எளிதாக கிடைக்காது. ஆனால், முயற்சி கைகொடுக்கும். போட்டியாளர் கள் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். பொருள் விரயம் ஏற்படலாம். சிக்கனமாக இருப்பது நல்லது.

பணியாளர்கள்: கடந்த காலத்தில் இருந்த பிரச்னையில் இருந்து விடுபடுவர். வேலையில் முன்னேற்றம் இருக்கும். ஆனாலும், வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்காமல் போகாது. பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சற்று முயற்சி செய்தால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். இடமாற்ற பீதி தொடரத்தான் செய்யும். வக்கீல்கள்,ஆசிரியர்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். நல்ல வளத்தையும் அடைவர். 

பெண்கள்: புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அமைதியும், பொறுமையும் தேவை. உடல் நலம் சிறப்படையும். 

கலைஞர்கள்: சிறப்பான பலன்களை காணலாம், புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். அதே நேரம் புகழ், பாராட்டு உங்களை வந்து சேரும். பண வரவும் இருக்கும்.

அரசியல்வாதிகள்:அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் நற்பெயர் பெறுவர். பொதுமக்கள் மத்தியில் முன்பைவிட தற்போது சிறப்பு அடைவர். எதிலும் வெற்றி பெறுவர்.

மாணவர்கள்: கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றத்திற்கு வழி காணலாம். இந்த ஆண்டு கல்வியில் நல்ல தேர்ச்சி இருக்கும். விரும்பிய பாடங்களைப்  பெறலாம். ஆனாலும், குரு  சாதகமற்ற ஸ்தானத்தில் இருப்பதால் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்கள் சொற்படிநடந்தால் முன்னேற்றம்  காணலாம். 

விவசாயிகள்: பழைய கஷ்டத்தில் இருந்து சற்று மீளலாம். அதிக உழைப்பு இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனும் கிடைக்கும். அதிகமான பண முதலீடு செய்ய வேண்டாம். தேவையான மகசூல் கிடைக்கும். குறிப்பாக நெல். கோதுமை. சோளம் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். ஆனாலும், அதிக பாதகம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

உடல்நிலை: நல்ல ஆ@ராக்கியத்துடன் இருந்து வருவீர்கள். உடல் நலனுக்கான விஷயங்களில் அக்கறை உண்டாகும்.

குரு அதிசாரப் பலன்!

குருபகவான் டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரைஅதில் இருப்பார். இந்த காலத்தில் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.

பரிகாரம்!

வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை தானம் செய்யலாம். ஏழைக் குழந்தைகள் படிக்க இயன்ற உதவி செய்யுங்கள்.ஆண்டி கோலத்தில் உள்ள முருகனை தரிசனம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு வாழ்வில் நலத்தைக் கொடுக்கும். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும் கேதுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். டிசம்பர் வரை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். சித்ரபுத்திர நாயனாரை வணங்குங்கள்.

பரிகாரப்பாடல்!

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே!

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 60/100 (மகிழ்ச்சிக்கும் பஞ்சமில்லே! பூசலுக்கும் குறைவில்லே!)

எதையும் துணிச்சலுடன் செய்து முடிக்கும் சிம்மராசி அன்பர்களே!

இதுவரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருந்து உங்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருப்பார். பணப்புழக்கம் மேம்பட்டிருக்கும். எடுத்த செயல்களை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்திருப்பீர்கள். பல்வேறு நன்மைகளை தந்த குரு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கடகத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளார். இது சுமாரான நிலையே. இனி அவரால் நன்மை தர இயலாது. குரு 12-ம் இடத்தில் இருக்கும்போது பொருள் பற்றாக்குறை ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும் என்பது பொதுவான பலன். இதனால் நீங்கள் மனம் ஒடிந்துபோய்விட வேண்டாம். குரு பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் இறுதியில் உங்களுக்கு நன்மையிலேயே முடியும். ஆசிரியர் மாணவனை கண்டிப்பது போன்றே, குரு பகவானின் தண்டனை அமையும். மாணவனை ஆசிரியர் அடிப்பது நன்மைக்கே. அதேபோல் குரு பகவானின் கெடு பலன்கள்  உங்களுக்கு இறுதியில் நன்மையே தரும். சனிபகவானின் பார்வையால் உங்கள் நிலை சற்றும் குறையாது. எதையும் சமாளித்து முன்னேற அவர் கருணை காட்டுவார்.வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். அவ்வப்போது சிறுசிறு பூசல்கள் வரலாம். ஒருவருக்கொருவர் பொறுமையாகவும், விட்டு கொடுத்தும் போக வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். அதே நேரம் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். அப்படி தாமதம் ஆவதும் ஏதோ ஒரு வகைக்கு நல்லதற்கே என்று நினைக்கவும். சிலரது வீடுகளில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. எனவே சற்று கவனமாக இருக்கவும். நவம்பர் மாதத்தில் சுக்கிரனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.

தொழில், வியாபாரம்:  நல்ல வருமானம் கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். டிசம்பருக்கு பிறகு அதிக அலைச்சலும், கடின உழைப்புக்கு தகுந்த லாபமும் இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். போட்டியாளர்களின் இடையூறுகள் வரலாம். அவர்கள் வகையில் ஒருகண் வைப்பது நல்லது. புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. நல்லவர்கள்போல் பழகி உங்களிடம் பணமோசடி செய்ய சிலர் முனையலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.

பணியாளர்கள்: பணியில் இருப்பவர்கள் கடந்த காலத்தைப்போல அனுகூலங்கள் இருக்கும் என்று எண்ண வேண்டாம். அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்கான மதிப்பும், வருவாயும் இருக்கும். வழக்கமான சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும்.டிசம்பர் மாதத்தில் பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். டிசம்பர் மாதத்தில் உங்களுக்கு அபார ஆற்றல்  பிறக்கும். நகை-ஆபரணங்கள், வீட்டு மனை வாங்கலாம். சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள்  உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் மற்றும் பொது நல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. 

மாணவர்கள்: முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. போட்டிகளில் வெற்றி கிடைப்பது அரிதாகும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். 

விவசாயிகள்: கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காவிட்டாலும் உழைப்புக்கு தகுந்த கூலி வரும். அதிக முதலீடு செய்யும் விவசாயத்தை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

உடல் நலம்: உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். சற்று கவனம் தேவை.

குரு அதிசாரப் பலன்!

குருபகவான் டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரைஅதில் இருப்பார் . இந்த காலத்தில் கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு.  இருப்பினும் இக்காலத்தில் சீரான முன்னேற்றத்தைக் காணலாம். பொருளாதார வளம் சிறப்படையும். எதிலும் எளிதில் வெற்றி காணலாம். டிசம்பருக்கு பிறகு எடுத்த காரியத்தை முடிக்க அவ்வப்போது தடைகள் வரும். அதை சற்று முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவுக்கு தகுந்தாற்போல் செலவும் இருக்கும். எனவே அனாவசிய செலவை குறைக்கவும். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்!

பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி பூஜை செய்யவும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். டிசம்பரில் இருந்து ராமபக்தர் ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும், கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள்.

பரிகாரப்பாடல்!

பன்மணி சந்திரகோடி திருமுடிசொன்மணி குண்டலக் காதியுழைக் கண்ணிநன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும்பூசிக்கின்றாளே!

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) 75/100 ( வீடும் வாங்கலாம் வேதனையும் வரலாம்!

பாச பந்தத்துடன் பழகி மகிழும் கன்னி ராசி அன்பர்களே!

உங்களுக்கு இதுவரை குருபகவான் ராசிக்கு 10ல் இருந்து, பிற்போக்கான பலன் அளித்து வந்தார். அதனால், மனதில் தீராத வெறுப்பு எப்போதும் குடிகொண்டிருக்கும். எதைச் செய்தாலும் நிறைவேற்ற முடியாமல் இழுபறி நிலை தொடர்ந்திருக்கும். இப்படி கெடு பலனைத் தந்து கொண்டிருந்த குரு பகவான் இப்போது இடம்மாறி 11-ம் இடத்திற்கு வருவது மிகவும் உன்னதமான நிலை. அவர் எண்ணற்ற பல நன்மைகளை தரக் காத்திருக்கிறார். பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். அதோடு குருவின் 5,7,9-ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக விழுகிறது. அதன் மூலமும் பல நன்மைகள் கிடைக்கும்.குரு பகவான் மட்டுமின்றி சனி பகவான் நன்மை தரும் இடத்தில் உள்ளனர். இது சிறப்பான காலம். இது வரை இருந்து வந்த உளைச்சல் மறைந்து மனதில் உற்சாகம் கூடும். பொருளாதார வளம் சிறப்படையும். நினைத்த காரியம் எளிய முயற்சியில் வெற்றிகரமாக நிறைவேறும். ஆற்றல் மேம்படும். அவப்பெயர் மறைந்து உறவினர் மத்தியில் செல்வாக்கு மேம்படும். அக்கம் பக்கத்தினரிடம் மதிப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு அடியோடு மறைந்து அன்பு மேம்படும். இதுவரை தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவீர்கள். அதுவும் மனதிற்கு பிடித்த நல்ல வரனாக அமையும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, விழா என அடிக்கடி சென்று மகிழ்வீர்கள்.வீட்டிற்கு அடிக்கடி உறவினர்கள் வருகையும், அதனால் நன்மையும் காண்பீர்கள். புதிய வீடு-மனை வாங்க யோகமுண்டு அல்லது தற்போது உள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடி புக வாய்ப்புண்டு. வாகன வகையிலும் அனுகூலம் உண்டாகும். 2015 ஜனவரிக்கு பிறகு குடும்பத்தில் வீண் குழப்பம் வரலாம். உறவினர் வகையில் விரோதமும் ஏற்படும். எடுத்த முயற்சியில் தடை உண்டாகும். 2015 பிப். 4 க்கு பிறகு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை பலப்படும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். பகைவர்களின் தொல்லை மறையும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் தக்க சமயத்தில் கிடைக்கும். நண்பர்களும் தானாக முன்வந்து உதவி செய்ய முற்படுவர். விரும்பிய வகையில் நகை-ஆபரணம் வாங்கி மகிழலாம். 

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தொழில் போட்டியாளர்கள் கூட உங்களின் திறமை உணர்ந்து சரண் அடைவர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமை பலவிதத்தில் மேம்பட்டு இருக்கும். டிசம்பருக்கு பிறகு புதிய வியாபாரத்தை ஆரம்பிக்க அதிர்ஷ்டகரமான சூழ்நிலை உருவாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுய தொழில் துவங்க நினைப்போருக்கு இது தகுந்த காலகட்டம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். 

பணியாளர்கள்:  வழக்கத்தை விட அதிக நற்பலனை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம். இதுவரை வேலையில் இருந்து வந்த தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும். வேலையில் புதிய தெளிவு பிறக்கும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பர். பதவி உயர்வு கிடைக்க யோகமுண்டு. சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு தக்க பணி கிடைக்க வாய்ப்புண்டு. கைத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மனமகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். அவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் செய்யலாம். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். வக்கீல் தொழில் சிறப்பாக நடக்கும்.

பெண்கள்: வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் அடைவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். இவர்களின் சீரிய தலைமையில் குடும்ப வாழ்வு சிறக்கும். பிறந்த வீட்டில் இருந்து வெகுமதிகள் அடிக்கடி வரலாம். மனம் போல புத்தாடை, ஆபரணம், ஆடம்பர பொருள்அதிகமாக வாங்குவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு மணப்பொருத்தம் கைகூடும். அக்கம் பக்கத்தார் உங்களை பெருமையாக பேசுவார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். 

கலைஞர்கள்:  புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். 

அரசியல்வாதிகள்:  தலைமையின் ஆதரவுடன் முன்னேற்றம் உண்டாகும். விரும்பிய பதவி கிடைக்கப் பெறுவீர்கள். 

மாணவர்கள்:  இந்த கல்வி ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்கப் பெறுவீர்கள். படிப்பில் முதன்மையானவர்களாகப் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தைப் பெறுவர். 

விவசாயிகள்:  விவசாயத்தில் வளர்ச்சி உண்டாகும். எதைப் பயிரிட்டாலும் நல்ல விளைச்சல் கிடைக்கும். சிலர் நவீன முறையைக் கையாண்டு விளைச்சலை அதிகரிக்கச் செய்வர். புதிதாக நிலம் வாங்கும் யோகமுண்டு. வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். 

உடல்நலம்:  உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு பெருமளவில் குறையும். 

குரு அதிசாரப் பலன்!

குருபகவான் டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரை அதில் இருப்பார். இந்த அதிசாரக் காலத்தில் பொருள் விரயம் ஏற்படலாம். பண விஷயத்தில் கவனம் தேவை. மனவேதனை உருவாகலாம். வீண் அலைச்சல் ஏற்படும். எந்தச் செயலையும் நிறைவேற்ற விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். 

பரிகாரம்!

கேதுவுக்கு கொள்ளு படைத்து அர்ச்சனை செய்யுங்கள். ராகுவையும் வழிபட்டு வாருங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். துர்க்கை வழிபாடு மிகவும் உயர்வை தரும். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடலாம். 2014 டிச.16 வரை சனிபகவானுக்கு எள் சாதம் படைத்து வணங்குங்கள். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். மேலும் காக்கைக்கு அன்னம் படைத்து சாப்பிடுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். பத்திரகாளி வழிபாடு நன்மையளிக்கும்.

பரிகாரப்பாடல்!

பரமனை மதித்திடாப் பங்க யாசனன்ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) 55/100 சொத்தும் வாங்கலாம் கடனும் கூடலாம்!

நட்புக்கு தோல் கொடுக்கும் துலாம்ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு குரு பகவான் 9ம் இடத்தில் இருந்து பல நன்மைகளைச் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக எடுத்த முயற்சியில் வெற்றியைத் தந்திருப்பார். பொருளாதார வளம் சிறந்திருக்கும். சுப நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்திருக்கும். இப்போது குருபகவான் 10ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சுமாரான நிலையே. 10-ம் இட குருவை ஜோதிடத்தில், ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்து உண்டதும் என்று கூறப்படுகிறது. அதாவது குரு 10-ல் இருக்கும்போது சிவன் பிச்சை எடுத்தார் என்பது பொருள். பொதுவாக பத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். சிலர் பணி,பதவியில் இடையூறு அதிகரிக்கலாம். ஆனால்,  இது பொதுவான பலன் என்பதால் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. குருபகவான் சாதகமற்று இருந்தாலும் அவரது 5ம் பார்வை சாதகமாக அமைந்துள்ளது. அதன்மூலம் எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி காண்பீர்கள். அதோடு மற்ற கிரகங்களின் நிலையை கொண்டும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலும் உங்கள் ஜாதகத்தில் தசா பலன்கள் சிறப்பாக இருந்தால் நன்மை நடக்க வாய்ப்புண்டு. கேது சாதகமாக இருப்பதால் பொருளாதார வளம் சிறக்கும். அதே சமயம், வீண் செலவைத் தவிர்ப்பது அவசியம். முயற்சியில் தடை ஏற்படலாம். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.குடும்பத் தேவை ஓரளவு பூர்த்தியாகும்.தம்பதியிடையே கருத்து வேறுபாடு உருவாகலாம். விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு விலகும். புதிய சொத்து வாங்கும் யோகம் வந்தாலும், அதற்காக கடன் வாங்குவதை தவிர்க்க முடியாது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் நன்மையாகவே முடியும். 2014 நவம்பர் மாதத்தில் வீடு மனை வாங்க யோகம் தானாகவே கூடி வரும். சுக்கிரன் மூலம் பெண்களால் நற்சுகம் கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரவும் வாய்ப்புண்டு. விருந்து விழா என அடிக்கடி சென்று மகிழ்வீர்கள். 2015 மார்ச்,ஏப்ரல் மாதங்களில் எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குரு பத்தாமிடத்தில் சாதகமற்று இருந்தாலும், அவருடைய 5,7,9ம் பார்வைகள் முறையே 2,4,6 ஆகிய ராசிகளில் பதிகிறது. இதன் மூலம் அவ்வப்போது நன்மையைப் பெற்று மகிழ்வீர்கள். இதனால், குடும்ப வாழ்வில் சிரமம் குறுக்கிட்டாலும், அதற்கான தீர்வும் உடனடியாக கிடைக்கும். தாயின் உடல்நலம் சிறப்பாக இருக்கும். அவரின் அன்பும், ஆசியும் தக்க சமயத்தில் கிடைக்கும். பகைவர் ஸ்தானமான ஆறாமிடத்தில் குருவின் 9ம் பார்வை விழுவதால், எதிரிகள் வியக்கும் விதத்தில் செயல்படுவீர்கள். 

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழிலில் புதிய முயற்சியை இப்போதைக்கு தொடங்குவது நல்லதல்ல. இருப்பதை சரிவர நடத்தினால் போதும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசாங்க வகையில் எந்த நன்மையும் எதிர்பார்க்க முடியாது. எது எப்படியானாலும் குருவின் பார்வை பலத்தால் பிரச்னை நீங்கும். 2014 நவம்பர் மாதத்தில் அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். 

பணியாளர்கள்:  பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். கடந்த காலம் போல நற்பலனை தற்போது எதிர்பார்க்க முடியாது. வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. அதிகாரிகளின் குறிப்பு அறிந்து நடப்பது நல்லது. சிலர் மன சஞ்சலத்தால் வேலையில் ஆர்வமில்லாமல் இருக்க நேரிடும். 2015 மார்ச், ஏப்ரல் மாதத்தில் பணியில் பணிஉயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். போலீஸ்,ராணுவம் போன்ற பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் பணியில் மேன்மை அடைவர். 

பெண்கள்: பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர். கணவரின் பேச்சுக்கு மதிப்பளிப்பது நன்மை தரும். உறவினர்களிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீட்டுச்செலவுக்குத் தேவையான பணம் சீராக கிடைக்கும். 

கலைஞர்கள்:  சற்று முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டுகள் கிடைக்காமல் போகலாம். 

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.2014 நவம்பர் மாதத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பட்டம் போன்றவை கிடைக்கும். 

மாணவர்கள்:  கடின முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் ஓரளவு கிடைக்கும். ஆசிரியர் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நன்மை தரும். 

விவசாயிகள்:  முன்னேற்றம் வாழ்வில் காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிர் வகைகளைத் தவிர்ப்பது நல்லது. 2014 செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். இந்தக் காலக்
கட்டத்தில் புதிய நிலம் வாங்கவும் வாய்ப்புண்டு. வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழ்நிலை இருக்காது. 

உடல்நலம்: ஆரோக்கியம் மேம்படும். உடல் நலன் குறித்த விஷயங்களில் அக்கறை உண்டாகும்.  

குரு அதிசாரப் பலன்!

குருபகவான் டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரைஅதில் இருப்பார். இந்த அதிசாரம் காலத்தில் குருவால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். முயற்சியில் வெற்றி உண்டாகும். 

பரிகாரம்!

சனியன்று சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வணங்கி வாருங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகரையும். ஆஞ்சநேயரையும் வழிபட்டு  வாருங்கள். வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கும் சென்று வாருங்கள். தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வணங்குங்கள். ஏழை சிறுவர்களுக்கு படிக்கவும் உதவி செய்யுங்கள்.

பரிகாரப்பாடல்!

புத்தியும் பலமும் தூயபுகழோடு துணிவும் நெஞ்சில்பத்தியும் அச்சமிலாப் பணிவும் நோயில்லா வாழ்வும்உத்தம ஞானச் சொல்லின் ஆற்றலும் இம்மை வாழ்வில்அத்தனை பொருளும் சேரும் அனுமனை நினைப்பவர்க்கே.

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) 80/100 (இனியெல்லாம் சுகமே! இருந்தாலும் சஞ்சலமே!

நன்றி மறவாத மனம் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே!

குரு பகவான் ராசிக்கு 8 ல் இருந்து வந்தார். இது சிறப்பான நிலை அல்ல . 8-ல் குரு இருக்கும் போது பல இன்னல்களை தந்திருப்பார். மனவேதனை வாட்டியிருக்கும். பொருளாதாரத்தில் திடீர் சரிவும் ஏற்பட்டிருக்கும். உறவினர், நண்பர்களால் பிரச்னைக்கு ஆளாகி இருப்பீர்கள். இந்த நிலையில் குரு தற்போது 9-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இதுவரை ஏற்பட்ட துன்பம் நீங்கி வாழ்வில் ”கம்  உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். நினைத்த காரியத்தை திட்டமிட்டபடி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை சிறக்கும். உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். குடும்பத்துடன் அடிக்கடி விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள்.அக்கம்பக்கத்தினர் உங்களை பெருமையாக பேசுவார்கள். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்களும் உங்களின் மேன்மை அறிந்து நெருங்கி வருவர். தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சி இனிதே நடக்க வாய்ப்பு உண்டு. அதிலும் நல்ல வரனாகவும் அமையும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. 2014 டிசம்பரில் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். இவை அனைத்தும் குருவால் கிடைக்கப் போகும் நற்பலன்களே.2014 டிசம்பருக்கு பிறகு உறவினர் வகையில் வீண் மனக் கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு விரும்பாத விதத்தில் வெளியூர் வாசம் இருக்க நேரிடலாம். குருவின் 5,7,9ம் பார்வைகள் முறையே ராசி, மூன்று, ஐந்தாம் இடங்களில் பதிகிறது. இதன் மூலம் நன்மையான பலன்களைப் பெற்று மகிழ்வீர்கள். குருவின் உச்சப்பார்வை ராசியில் பதிவதால், எடுத்துக் கொண்ட புதுமுயற்சி அனைத்தும் மளமளவென நிறை வேறும். மனம் போல மணவாழ்வு அமையும். மனதில் எப்போதும் தைரியம் நிலைத்திருக்கும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு தக்க சமயத்தில் கிடைக்கும். புத்திரர்களின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள். அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான விஷயங்களில் ஆர்வம் காட்டி வருவீர்கள். 

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், அதற்கேற்ப அதிக வருமானமும் கிடைக்கும். கடந்த காலத்தில் குறுக்கிட்ட சிரமம் அனைத்தும் விலகும். எதிர்காலம் கருதி சேமிக்கவும் செய்வீர்கள். இது ஏழரை சனி காலம் என்பதால் அதிக முதலீடு செய்ய வேண்டாம். பங்குதாரர்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்படும். அவ்வப்போது மறைமுக எதிரிகள் தொல்லை இருக்கத் தான் செய்யும். சற்று கவனம் தேவை. கையிருப்பை நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் போட்டு வைக்கவும். 2015 ஜனவரியில் அரசாங்க வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பிப்ரவரியில் லாபம் மீண்டும் அதிகரிக்க தொடங்கும். 

பணியாளர்கள்:  பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக வேலையில் எண்ணற்ற பிரச்னை இருந்திருக்கும். அந்த பிரச்னைக்கு இனி விடிவுகாலம் ஏற்படும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு முக்கிய பொறுப்பும் கிடைக்க வாய்ப்புண்டு. பணியில் திறமை பளிச்சிடும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஏதோ காரணத்தால் பணியை இழந்தவர்கள் மீண்டும் பணியில் அமர்வர். 

பெண்கள்:  குடும்பத்தில் குதூகலமான பலனைக் காண்பர். குறுக்கிடும் தடைகளை சாதுரியமாக செயல்பட்டு எளிதில் முறியடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட அவப்பெயர் அடியோடு நீங்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் சமூகத்தில் மிகவும் உன்னத நிலையை அடைவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர் மத்தியிலும் நன்மதிப்பை பெறுவர். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். 2015 பிப்ரவரியில் சுக்கிரனால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கலைஞர்கள்: பொருளாதார வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். சமூகத்தில் புகழ், பாராட்டு வளரும். சிலர் அரசிடம் இருந்து விருது பெற வாய்ப்புண்டு. 

அரசியல்வாதிகள்:  அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த தடங்கல் இனி இருக்காது. மக்களிடத்தில் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். 

மாணவர்கள்:  இந்த கல்வி ஆண்டில் சிறப்பான வளர்ச்சியைக் காணலாம். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறவும் வாய்ப்புண்டு. கடந்த ஆண்டு இருந்த தேக்கநிலை மறையும். விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் சிலருக்கு கிடைக்கும். படித்து முடித்து விட்டு வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். 

விவசாயிகள்:  விவசாயம் சிறப்படையும். நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழல் அமையும். நிலப்பிரச்னைக்கு சுமூகத்தீர்வு காணலாம். 

உடல்நலம்: நோயின் தீவிரம் குறைந்து மருத்துவச்செலவு கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பதால் கடமையில் ஆர்வம் பிறக்கும். 

குரு அதிசார பலன்!

குருபகவான் டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரைஅதில் இருப்பார். இந்த சமயத்தில் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்த வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் தடைகள் அடிக்கடி உண்டாகி விலகும். யாரிடமும் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். நிதானத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். 

பரிகாரம்!

சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். வெள்ளியன்று அம்மன் வழிபாடு செய்வது நன்மையளிக்கும். பத்திரகாளி அம்மனை எலுமிச்சை தீபம் ஏற்றி வாருங்கள். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி எள் சோறு படைத்து அதை காக்கைக்கு போடலாம். யானைக்கு கரும்பு கொடுப்பது நல்லது. ஊனமுற்ற ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். 

பரிகாரப் பாடல்!

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டுநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்1) 55/100 (பெண்களால் உயர்வு பணநிலையில் சரிவு!

குறிக்கோளுடன் உழைத்திடும் தனுசு ராசி அன்பர்களே!

இதுவரை குரு பகவான் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து நன்மை பல வழங்கிக் கொண்டிருந்தார். இதனால் சமூகத்தில் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி வந்திருப்பீர்கள். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கி இருப்பீர்கள். தற்போது குரு 8-ம் இடமான கடகத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. 8ல் குரு பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். தேவையற்ற பகைமையை உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால் இதனைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் பார்வை சாதகமாக அமைந்துள்ளது. இடையூறு வாழ்வில் குறுக்கிட்டாலும் குருவின் சுபமான பார்வை பலத்தால் விரைவில் நீங்கி விடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சீரான வசதி வாய்ப்பு இருக்கும். தம்பதியிடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். சுபவிஷயங்களில் தடைகள் குறுக்கிடலாம். அதே நேரம் தீவிர முயற்சியால் நடத்திட வாய்ப்புண்டு. 2014 நவம்பர்,டிசம்பர் மாதத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுத்த புதிய முயற்சி வெற்றி அடையும். பண வரவு அதிகமாகும். உறவினர் வருகையும், அதனால் நன்மையும் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள்.  உச்சத்தில் இருக்கும் குருவின் பார்வை 5,7,9 ஆகிய மூன்றும் முறையே 2,4,12 ஆகிய மூன்று இடங்களில் பதிகிறது. இதனால் பற்றாக்குறை நீங்கி பொருளாதார வளம் சேரும். குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். வீடு, வாகன வகையில் நன்மை உண்டாகும். தாயின் உடல்நலம் சீராகும். அவரின் அன்பும், ஆசியும் பெற்று மகிழ்வீர்கள். தொலை தூர பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிகத் தலங்களுக்குச் சுற்றுலா சென்று வருவீர்கள். 

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் டிசம்பர் வரை நல்ல வளர்ச்சியும், அதற்கேற்ப லாபமும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழிலில் அதிக வருவாய் கிடைக்கும். அதன் பிறகு எதிலும் அலட்சியம் காட்டுவது கூடாது. கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். புதிய தொழில் முயற்சி இப்போதைக்கு தேவையில்லை. ஆனால், பண விஷயத்தில் சிரமம் உண்டாகாது. புதிதாகப் பழகும் நண்பர்களின் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. 2015 ஜனவரியில் வீண் செலவு அதிகமாகும். 

பணியாளர்கள்:  பணியில் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. சக ஊழியர்களால் வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சலுகைப்பயன் பெற கடின முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். எது எப்படியானாலும் குருவின் பார்வையால் தடைகளை முறியடிக்க வாய்ப்புண்டு. டிசம்பர் மாதத்தில் பணி, இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சக பெண் பணியாளர்கள் உதவிகரமாக இருப்பர்.

பெண்கள்: குடும்ப வாழ்வில் ஓரளவு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பச் செலவுக்குத் தேவையான பணம் சீராக கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் பாதிப்பு ஏதுமிருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையால் சிரமப்பட நேரிடும். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைஞர்கள்: விடாமுயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் பெற முடியும். எதிர்பார்த்த வருமானம், பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். தொழில் ரீதியாக அவ்வப்போது நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளலாம். 

அரசியல்வாதிகள்:  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பது நன்மையளிக்கும். 2015 மார்ச்15க்குப் பிறகு பெண்கள் வகையில் சிரமத்தை சந்திக்க நேரலாம் கவனம். 

மாணவர்கள்: மாணவர்கள் இந்த கல்வியாண்டில் அக்கறையுடன் படிப்பது அவசியம். குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. போட்டிகளில் வெற்றிபெற அதிக முயற்சி தேவைப்படும். பெற்றோர் கருத்துக்கு மதிப்பளிப்பது நன்மை தரும். 

விவசாயிகள்:  உழைப்புக்கு ஏற்ற பலன் மட்டுமே கிடைக்கும். அதிக முதலீடு தேவைப்படும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வம்பு, வழக்கில் சிக்காமல் இருப்பது நன்மையளிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் கிடைக்கும்.

உடல் நலம்:  உடலில் அவ்வப்போது பாதிப்பு வரலாம். குறிப்பாக வயிறு பிரச்னை உருவாக இடமுண்டு. பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது. 

குரு அதிசார பலன்!

குருபகவான் டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரை அதில் இருப்பார். இந்த அதிசாரம் காலத்தில் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த பின்னடைவு மறையும். 

பரிகாரம்!

ராமர் சந்நிதியில் தீபமேற்றி வழிபடுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். டிச. 16 முதல் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வசதி படைத்தவர்கள் கருப்பு நிற பசுவை தானம் செய்யலாம். 

பரிகாரப்பாடல்!

கார கார கார கார காவல் ஊழி காவலன்போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீராம ராம ராம ராம ராம என்னும் நாமமே.

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) 75/100 (அதிகரிக்கும் ஆற்றல் உறவுகளால் அல்லல்!

செய்த நன்றியை மறக்காத மகர ராசி அன்பர்களே!

குரு பகவான் ராசிக்கு 6 ல் இருந்தார். அவர் பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். நிம்மதியை இழக்க செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாறி பின்தங்கியிருப்பீர்கள். சிலருக்கு பொருளாதார சரிவு கூட ஏற்பட்டிருக்கலாம். தேவையற்ற வீண் பகையும் உருவாகியிருக்கும். தொல்லைகளை அனுபவித்து வரும் உங்களுக்கு வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் குரு பகவான் 6 ல் இருந்து 7ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான நிலை. வாழ்வில் படிப்படியாக பலவித நன்மைகளைத் தர குரு காத்திருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்வார். சுப நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி மகிழ்வீர்கள். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் எப்போதும் பணம் புழக்கத்தில் இருக்கும். குடும்பத் தேவை அனைத்தும் இனிதே பூர்த்தியாகும். வாழ்வில் ஆடம்பர வசதி பெருகும். மனதில் நினைத்த காரியத்தை உடனடியாக நிறைவேற்றுவீர்கள். அதோடு குருவின் 5-ம் இடத்துப் பார்வையாலும் சிறப்பான நன்மை ஏற்படும்.முக்கிய கிரகங்கள் சாதகமாக அமைவதால் இதனை ஒரு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். ஆற்றல் மேம்படும். உங்களை விலகிச் சென்றவர் கூட வலிய வந்து உறவாடுவர். எதிரிகள் கூட உங்களைச் சரணடைய முன் வருவர். உறவினர் மத்தியில் செல்வாக்கு உள்ளவராக இருப்பீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த விஷயம் கூட தற்போது நிறைவேற வாய்ப்புண்டு. குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிப்பதால் ஒற்றுமை சிறக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்ட வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடிக்கடி வீட்டிற்கு உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும். விருந்து, விழா, இன்பச் சுற்றுலா பயணம் என அடிக்கடி செல்ல வாய்ப்புண்டாகும். சிலருக்கு புண்ணிய தலங்களைத் தரிசிக்கும் பாக்கியமும் கிடைக்கும். உச்சநிலையில் கடகத்தில் இருக்கும் குருவின் 5,7,9ம் பார்வைகள் முறையே ராசி, மூன்று, பதினொன்று ஆகிய ஸ்தானங்களில் பதிகிறது. இதன் மூலம் வாழ்வில் நன்மை காண்பீர்கள். இதனால், ஆரோக்கியம் மேம்படும். ஆயுள் விருத்தி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து மிக்க மனிதராக வலம் வருவீர்கள். தைரிய ஸ்தானமான மூன்றில் பதிவதால் மனக் குழப்பம் அடியோடு நீங்கும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் துணை நிற்பீர்கள். இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வமுடன் ஈடுபட வாய்ப்புண்டு. உறவினர் இல்லங்களில் நடக்கும் விருந்து, விழா என அடிக்கடி சென்று மகிழ்வீர்கள். மூத்த சகோதரர்களிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்குவதோடு இணக்கம் அதிகரிக்கும். வாழ்வில் அவர்களின் வழிகாட்டுதலையும் ஏற்று நடப்பீர்கள். நாணயம் மிக்க மனிதராக கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்றி வைப்பீர்கள். 

தொழில், வியாபாரம்: உற்பத்தி சிறந்து நல்ல வருமானத்தைக் காண்பர். புதிய தொழிலைத் தொடங்கும் எண்ணமும் நிறைவேறும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அரசிடமிருந்து எதிர்பார்த்த சலுகை வந்து சேரும். சிலர் வெளிநாட்டுடன் தொடர்பு கொண்டு தொழிலை விரிவுபடுத்துவர். உங்களிடம் வேலைபார்க்கும் ஊழியர்கள் நம்பிக்கையுடனும், நல்ல எண்ணத்துடனும் நடந்துகொள்வர். 

பணியாளர்கள்:  பணியாளர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர் கூட தானாகவே விலகிச் செல்வர். பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். சம்பள உயர்வு எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். செப்டம்பரில் போலீஸ், பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நற்பலன் பெறுவர். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணியிடத்தில் பெண்களின் ஆதரவும் நல்லமுறையில் கிடைக்கும். 

பெண்கள்: பெண்கள் வாழ்வில் உற்சாகத்துடன் செயல்படுவர். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் நன்மைக்கு வழிவகுக்கும். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். தம்பதியினர் இடையே அன்பு மலரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கலைஞர்கள்: கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று வருமானம் காண்பர். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். 

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். தொண்டர்களின் ஒத்துழைப்பு நல்ல விதத்தில் அமைந்திருக்கும். 

மாணவர்கள்:  கடந்த ஆண்டு இருந்து வந்த மந்த நிலை மாறும். கல்வியில் ஆர்வம் கூடும். கூடுதல் மதிப்பெண் பெறலாம். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். போட்டி, பந்தயத்தில் அடிக்கடி கலந்து கொண்டு வெற்றி பெறுவர்.

விவசாயிகள்:  நல்ல மகசூலைக் காண்பர். அனைத்து பயிர்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். நவீன விவசாயம் மூலம் விவசாயப்பணியை மேம்படுத்துவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழல் நிலவும். இழந்த சொத்து மீண்டும் கைக்கே வந்து சேரும். 

உடல்நலம்:   உடல் நிலை சிறப்பாக இருக்கும். 2015 பிப்ரவரியில் கண் தொடர்பான உபாதைகள் வரலாம். 

குரு அதிசார பலன்!

குருபகவான் டிசம்பர் 3 ல் அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரை அங்கு இருப்பார்.  இந்த சமயத்தில் குரு பகவானால் மனதில் குழப்பம் உருவாகும். தேவையற்ற பிரச்னைகள் வாழ்வில் குறுக்கிடும். பொருளாதார சரிவும் உண்டாகலாம். வீண் சச்சரவால் உறவினர் பகை ஏற்படும். 

பரிகாரம்!

கிருஷ்ணரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வரலாம். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். டிசம்பர் 16 வரை விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். நவக்கிரகங்களை வலம் வந்து வணங்குங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். வசதி படைத்தவர்கள் பசு தானம் செய்யலாம். 

பரிகாரப்பாடல்!

அருமறை முதல்வனை ஆழி மாயனைக் கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனைத் திருமகள் தலைவனை தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) 55/100 பகைவர் நடுக்கம் பணியில் அழுத்தம்!

துணிவுடன் முடிவெடுக்கும் கும்ப ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 5 ல் இருந்து நன்மையளித்துக் கொண்டிருந்தார். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கையிலும் பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்திருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பீர்கள்.  இந்த நிலையில் குரு பகவான் ராசிக்கு 6ல் அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. 5ல் இருந்தது போல நற்பலனை அவரால் செய்ய முடியாது. அதே நேரம் ஒரேயடியாக பிற்போக்கான பலன் ஏற்படும் என்று பயப்படத் தேவையில்லை. 6ல் இருக்கும் குருவால் உடல்நலத்தை பாதிக்கலாம். மனதில் தளர்ச்சியை உருவாகும். அவரது 9-ம் பார்வை மீனத்தில் விழுவதால் பல்வேறு நன்மை கிடைக்கும். எந்த இடையூறையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் அபரிமிதமான ஆற்றல் அவ்வப்போது வெளிப்படும். அதனை கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். தனிப்பட்ட ஜாதகத்தில் தசாபுத்தி சிறப்பாக இருந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆறாம் இட குருவால் வீண் செலவு அதிகரிக்கும். முயற்சியில் தடைகள் குறுக்கிடும். தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே செயலை நிறைவேற்ற முடியும். சமூகத்தில் எதிர்பார்த்த மதிப்பு கிடைக்க வாய்ப்பில்லை. யாருடனும் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவது கூடாது. அளவாகப் பேசுவது நன்மையளிக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். தம்பதியிடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப விஷயத்தில் தாமதம் ஏற்பட்டாலும் நன்மையாகவே இருக்கும். மறைமுக எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் @பாவர்.  நட்பு விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. டிசம்பருக்கு பிறகு இந்த நிலை மாறும்.  கடகராசியில் இருக்கும் உச்சகுருவின் 5,7,9ம் பார்வை முறையே 2,10,12 ஆகிய ராசிகளில் பதிகிறது. இதனால், வாழ்வில் பல நன்மை காண்பீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே கருத்துவேற்றுமை ஏற்படும் சமயத்தில், குருவருளால் விரைவில் பிரச்னை தீரும். பணப் பற்றாக்குறை ஏற்பட்ட சமயத்தில் கூட அதிர்ஷ்டகரமாக பணம் ஒருவழியில் வர வாய்ப்புண்டு. பணியில் திறமை பளிச்சிடும் விதத்தில் செயல்படுவீர்கள். தொழில்நுட்பம் குறித்து கற்கும் ஆர்வம் ஏற்படும். பன்னிரண்டாம் வீடான மகரத்தில் குருவின் நேரடியான ஏழாம் பார்வை விழுவதால், சுபவிரயம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்திட யோகமுண்டு. ஆன்மிகத் தலங்களுக்குச் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். 

தொழில், வியாபாரம்:  தொழில், வியாபாரத்தில் மிதமான வளர்ச்சியும், அதற்கேற்ற லாபமும் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். பெண்கள் வகையில் இடையூறு வரலாம். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்காமல் போகலாம். புதிய முயற்சி, விரிவாக்கம் இப்போதைக்கு வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும்.  

பணியாளர்கள்:  பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். கடந்த காலத்தை விட பணிச்சுமை அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போக வேண்டிய கட்டாயம் உருவாகலாம். சிலருக்கு பணி, இடமாற்றம் ஏற்படலாம். அதிக முயற்சி செய்தால் புதிய வேலையும் கிடைக்கும். ஆரம்ப காலத்தில் சம்பளம் சற்று குறைவாக இருந்தாலும் போகப்போக முன்னேற்றம் தருவதாக அமையும். 

பெண்கள்:  பெண்கள் குடும்பச் செலவுக்கு அவ்வப்போது திண்டாட நேரிடும். சிக்கனமாக செலவழிப்பது நன்மையளிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை கொள்ள வாய்ப்புண்டு. கணவரின் சொல்லுக்கு கட்டுப்படுவது பிரச்னையைத் தவிர்க்க உதவும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதிக்கு ஆளாக வாய்ப்புண்டு. 

கலைஞர்கள்:   புதிய ஒப்பந்தங்கள் விடா முயற்சியின் பேரில் கிடைக்கும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.  

அரசியல்வாதிகள்:  அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். தொண்டர்களின் எதிர்ப்புக்கு ஆளாகாமல் இருப்பது நன்மையளிக்கும்.  

மாணவர்கள்: தீவிர முயற்சி எடுத்தால் தான் நல்ல முன்னேற்றம் பெற முடியும். படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகலாம்.  

விவசாயிகள்:  விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற பலனைத் தான் பெற முடியும். அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். மானாவாரி விவசாயத்தை மேற்கொள்வது நல்லது. நிலப்பிரச்னையை சமரச பேச்சின் மூலம் தீர்ப்பது நல்லது. புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.  

உடல்நலம்:  கேதுவால் சில சமயத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. மற்றபடி உடல்நலம் சிறப்பாக இருக்கும்.  

குரு அதிசார பலன்!

குருபகவான் டிசம்பர் 3 ல் அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22ம் தேதி வரைஅதில் இருப்பார். இந்த காலத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சியை நடத்திட வாய்ப்புண்டு. சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு பதவி உயர்வு உண்டாகும். 

பரிகாரம்!

விநாயகரையும், லட்”மியையும் வணங்கி வாருங்கள். நவக்கிரகங்களை தொடர்ந்து வலம் வந்து வழிபடுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஆலங்குடி சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 21 தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனி பகவானும் சாதகமற்ற நிலையில் இருக்கிறார். அவரின் அருளை பெற சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள்.  

பரிகாரப்பாடல்!

உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே! உலகமெலாம் காத்து நிற்கும் தேவி மகாலட்சுமியே! உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலட்சுமி தாயே! உன் பாதம் சரணடைந்தோம் நலம் தருவாய் அம்மா! 

மீனம்: (பூரட்டாதி4, உத்திரட்டாதி, ரேவதி) 75/100 (கையிருப்பு ஏறும்! உடல்நிலை வாட்டும்!)

கருணை மனப்பான்மை கொண்ட மீனராசி அன்பர்களே!

குருபகவான் இது வரை 4 ல் இருந்து பல்வேறு இன்னலைத் தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்னைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களுடன் வீண் சச்சரவு ஏற்பட்டிருக்கும். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகி இருக்கலாம். இந்த நிலையில் குரு பகவான் ராசிக்கு 5ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான நிலை. இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வில் பொருளாதார வளம் காணலாம். இது தவிர குருவின் 5,7 ம் பார்வைகளாலும் நன்மை அதிகரிக்கும். தடைகள் நீங்கி முயற்சி அனைத்தும் எளிதாக நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் சேமிப்பு கூடும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். 

கடந்த ஆண்டு இருந்து வந்த குடும்ப பூசல் மறையும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். பிரிந்து இருந்த சொந்தங்கள் ஒன்று சேரும். தடைப்பட்டு வந்த திருமணம் இனி மளமளவென நிறைவேறும். சிலருக்கு வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும். உறவினர் வகையில் விருந்து, விழா என்று அடிக்கடி சென்று வருவீர்கள். சிலருக்கு ஆன்மிக திருத்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையும் கிடைக்கப் பெறுவீர்கள். மனம் விரும்பிய வகையில் புத்தாடை அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள். உச்சவீடான கடகத்தில் இருக்கும் குருவின் 5,7,9ம் பார்வைகள் மூன்றும் முறையே ராசி, 9, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. இதன் மூலம் வாழ்வில் நன்மை உண்டாகும். ராசியில் பதிவதால் செய்யும் எதிர்கால நன்மை கருதிச் செய்யும் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தந்தையின் உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவரின் அன்பும், ஆசியும் வாழ்விற்கு துணைநிற்கும். சிலருக்கு பூர்வீக வழியில் சொத்து கிடைக்க யோகமுண்டு. மூத்த சகோதரர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கி, இணக்கம் அதிகரிக்கும். அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்பது வாழ்வில் நன்மையளிக்கும். செய் தொழிலில் சிறிய முயற்சிக்குக் கூட நிறைய பலனை எதிர்பார்க்க முடியும். தான தரும சிந்தனை மனதில் மேலோங்கும். அதனால், பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். 

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் அமோக வளர்ச்சியும், அதிக லாபமும் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த  இடையூறுகள் அடியோடு மறையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, ஒற்றுமை ஏற்படும். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபடுவர். சனியால் பளு அதிகரித்தாலும் அதற்கான வருமானமும் அதிகமாகும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் மேற்கொள்பவர்கள் கூட நல்ல ஆதாயம் கிடைக்கப் பெறுவர். எதிர்காலத்தில் அதுவும் நல்ல வளர்ச்சியை அடையும். சிலர் தொழில், வியாபார விஷயமாக நீண்டதூர பயணமாக வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பெண்களை பங்குதாரர்களாக கொண்ட வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். இதுவரை தடைப்பட்டு வந்த பதவி உயர்வு இனி கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் அதிகார அந்தஸ்த்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு பணி,இட மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.சக பெண் ஊழியர்களால் நன்மை உண்டாகும். 

பெண்கள்:  வாழ்வில் சந்தோஷம் நிலைத்திருக்கும். கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். உறவினர் இல்ல விசேஷங்களை தலைமையேற்று நடத்தி வைப்பீர்கள். கன்னியருக்கு விரும்பிய வகையில் மணவாழ்வு அமையும். புதுமண 
தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.

கலைஞர்கள்:  நல்ல புகழும் பெருமையும் கிடைக்க பெறுவர். புதிய ஒப்பந்தம் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். சிலருக்கு அரசிடம் இருந்து விருது கிடைக்க வாய்ப்புண்டு. 

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மக்கள்நலப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவர். அரசியல் வாழ்வோடு தொழிலும் சிலர் சாதனை படைக்க இடமுண்டு. 

மாணவர்கள்:  நன்கு படிப்பதால் இந்த ஆண்டு கல்வியில் சிறப்பான பலனை காணலாம். கடந்த ஆண்டில் இருந்த தேக்க நிலை மாறும். மேற்படிப்பு படிக்க நினைப்போருக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு சென்று படிக்க யோகமுண்டாகும். 

விவசாயிகள்:  நல்ல விளைச்சலால் வருமானம் கூடும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்புண்டாகும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். கூலி வேலை செய்பவர்களும் மன நிம்மதியுடன் காணப்படுவர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். நிலப்பிரச்னையில் சாதகமான முடிவு கிடைக்கும். 

உடல்நலம்:   2014 டிசம்பருக்கு பிறகு அவ்வப்போது உடல்நலக்குறைவு உருவாகலாம். அதனால் மருத்துவச் செலவு செய்ய நேரிடும். 

குரு அதிசார பலன்!

குருபகவான் டிசம்பர் 3ல் அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22ம் தேதி வரைஅதில் இருப்பார். இந்த காலத்தில் மன உளைச்சலையும், உறவினர் வகையில் பகையையும் உருவாக்குவார். பணத்தட்டுப்பாடும் உருவாகும். முயற்சியில் தடைகளும் உருவாகி மறையும். 

பரிகாரம்!

ராகு-கேது சாதகமற்ற நிலையில் உள்ளனர். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை அம்மனை எலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பவுர்ணமி நாளில் வீட்டில் விளக்கு ஏற்றி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள்.

பரிகாரப் பாடல்!

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்  இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |