Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் திடீர் மழை, வெள்ளம், நிலச்சரிவினால் 13 பேர் பலி!

இலங்கையின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மற்றும் அதை அண்மித்த தெற்கு மாவட்டங்களில் இதன் பாதிப்புகள் கூடுதலாக உள்ளன என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறுகிறது. தலைநகர் கொழும்பில் பல வீதிகள் மற்றும் அருகாமையிலுள்ள சிறு நகரங்களின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.களுத்துறை மாவட்டமே திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகளில், விமானப்படை, கடற்படை, இராணுவம் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் 10 செ மீ க்கும் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும் வானிலை முன்னறிவிப்புத் துறை கூறுகிறது. உயிரிழந்தவர்களைத் தவிர இருவரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள். இலங்கையின் தென்பகுதிக் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments