Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு! 1000 பாதயாத்திரீகர்கள் வெள்ளிக்கிழமை காட்டுக்குள் பிரவேசிப்பர்

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுப்பாதை இன்று 20ஆம் திகதி திறக்கப்படுகிறது.
காட்டுப்பாதையால் பயணிப்பதற்கென உகந்தையில் சுமார் 1000 பேரளவில் நேற்று வியாழக்கிழமை தங்கியிருந்ததாக வேல்சாமி அங்கிருந்து தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் முதல்தொகுதி பாதயாத்திரீகர்கள் 1000பேர் புறப்படவுள்ளனர்.
அவர்களுக்கு இன்றும் நேற்றும் வனஜீவராசிகள் திணைக்களமும் கடற்படையினரும் 03 வேளையும் அன்னதானம் வழங்கினர்.
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து புறப்பட்ட வேல்சாமி தலைமையிலான குழுவில் 92பேர் உள்ளனர். அதனைவிட வடகிழக்கிலிருந்து கூட்டம்கூட்டமாக வந்துசேர்ந்த குழுவினரும் உகந்தையில் தங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments