கல்முனை கடலில் மூழ்கிய இளைஞன் ஒருவரின் சடலம் இன்று சாய்ந்தமருது கடல் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பாண்டிருப்பை சேர்ந்த லோகநாதன் ஜெனிலோசன் (20 வயது) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
உயிரிழந்த லோகநாதன் ஜெனிலோசன் தனது மூத்த சகோதரர் லோகநாதன் தேவநேசன் (வயது 21) மற்றும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவருடனும் இணைந்து நேற்று புதன்கிழமை கல்முனை ஐஸ்வாடி கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல்போயுள்ளார். கடலில் மூழ்கிய இவரை தேடியும் கிடைக்காமல் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் சாய்ந்தமருது கடலில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மிதந்து கொண்டிருந்ததை கண்ட மீனவர்கள் காரைதீவு மீனவர் சங்க பிரதிநிதி கே. ஜெயசிறிலுக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு சடலத்தை கரைக்கு எடுத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
0 Comments