Advertisement

Responsive Advertisement

பட்டிருப்பு கல்வி வலயம் கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம்

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி– 2014 இல் பட்டிருப்பு கல்வி வலயம் மெய்வல்லுநர் போட்டியில் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களும் இப் போட்டியில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பட்டிருப்பு கல்வி வலயம் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமையையிட்டு கருத்து வெளியிட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்கள்.
அணியாகச் செயற்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு சுட்டியாக இவ் வெற்றி; அமைந்துள்ளதுடன் வலுவான, திறன்மிக்க எதிர்காலச் சமூகமொன்று எம் வலயத்தில் உள்ளது என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளது. விழுந்து, எழுந்து, எகிறிப் பாய்ந்துள்ள வலயமாக கிழக்கு மாகாணத்தில் எமது வலயம் திகழ்கின்றது. எந்தவொரு செயற்பாட்டினையும் நன்கு திட்டமிட்டு நெறிப்படுத்தி நடைமுறைப்படுத்தினால் சாதனைகளை இலகுவாகப் புரிந்துவிடலாம் என்ற செய்தியையே இச் சாதனை எமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றது.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு வரலாற்றுப் பெருமைமிக்க இச் சாதனையை ஏற்படுத்தித் தந்த வெற்றியாளர்கள், ஆற்றுப்படுத்திய ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகள், ஊக்கம் கொடுத்த பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமையடைகின்றேன். மேலும் இவர் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் கலைத்திட்ட செயற்பாடுகளிலும் இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளிலும் சாதனைகள் புரிய உங்கள் அர்ப்பணிப்பான சேவையை வேண்டி இப் பெருமைமிக்க வரலாற்றுச் சாதனையை உங்கள் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பிக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் பட்டிருப்பு கல்வி வலயம் கிழக்கு மாகாண 19 ஆவது மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் எமது மாணவர்கள் பின்வரும் நிலைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
19 வயதுக்கான பெண்கள் பிரிவில் மட்ஃபட்ஃசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி பி.கோமுகி முதன்மை வீராங்கனையாக வெற்றி பெற்று வலயத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார். இத்துடன் 
1 ஆம் இடங்கள் 21 இதில் தனி நிகழ்ச்சிகள் 16ம்,அஞ்சல் நிகழ்ச்சியில் 05 ம்
2 ஆம் இடங்கள் 18 இதில் தனி நிகழ்ச்சிகள் 12ம்,அஞ்சல் நிகழ்ச்சியில் 06 ம்
3 ஆம் இடங்கள் 15 இதில் தனி நிகழ்ச்சிகள் 15ம்,அஞ்சல் நிகழ்ச்சியில் 03 ம்



பெற்றுக் கொண்ட கேடயங்கள்
மெய்வல்லுனர் நிகழ்ச்சிகள் - 1 ஆம் இடம்
அஞ்சல் நிகழ்ச்சிகள் ஆண்கள் -1 ஆம் இடம்
அஞ்சல் நிகழ்ச்சிகள் பெண்கள்; -2 ஆம் இடம்
மெய்வல்லுனர் நிகழ்ச்சிகள் பெண்கள் - 2 ஆம் இடம்
பாடசாலைகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்
மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் 75 புள்ளிகள்
மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயம் 55 புள்ளிகள்
மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயம் 46 புள்ளிகள்
மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயம் 11 புள்ளிகள்
மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் 06 புள்ளிகள்
மட்/பட்/ஆணைகட்டியவெளி நாமகள் வித்தியாலயம் 05 புள்ளிகள்
மட்/பட்/தேத்தாத்தீவு மகா வித்தியாலயம் 01 புள்ளி















Post a Comment

0 Comments