அச்சுவேலிப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நிக்கோநாதன் அருள்நாயகி (வயது 50),இவரது மகனான நி.சுபாங்கன் (வயது 20), மற்றும் இவரது மகள் யசோதரன் மதுசா (வயது 28) ஆகியோரே கொலை செய்யப்பட்டவர்களாகும்.
மேலும் படுகாயமடைந்த நிற்குணாந்தன் தர்மிகா (வயது 25),யசோதரன் வேலன் (வயது 30) ஆகியோர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடும்பத்தகராறே இந்த வாள்வெட்டுக்கு காரணம் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரு பிரதான சந்தேக நபர்கள் ஊரெழு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து வாள் மற்றும் ஆட்டோவும் மீட்பு.
0 Comments