கிழக்கு பல்கலைக்கழகத்துக்குள் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினையடுத்து அங்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மாணவர்களுடன் நிலைமைகள் குறித்து கேட்டறிந்துகொண்டதாக அமைச்சு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உபவேந்தரை மாற்றுமாறு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமையின் உச்சமாக இன்று பல்கலைக்கழகத்துக்குள் பெரும் அச்ச நிலையேற்பட்டது.
இந்த நிலையில் அங்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மாணவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
0 Comments