மட்டக்களப்பு,வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலியார் வட்டை கிராமத்தில் இருந்து திருடிச் சென்ற 145000 ரூபா பெறுமதியான மாடுகள் அக்கரைப்பற்று பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மண்டூர் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலியார் வட்டை கிராமத்திலிருந்து கடந்த செய்வாய்கிழமை இரவு எருமை மாடுகள் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்தபோது திருடிச்செல்லப்பட்டிருந்தது.
இந்த எருமை மாடுகளை திருடிச்சென்ற நபரும் 145000 ரூபா பெறுமதியான
மாடுகளும் அக்கரைப்பற்று பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி வெல்லாவெளிப் பொலிசாரும் அக்கரைப்பற்று பொலிசாரும் இணைந்து விசாரணைகளை நடாத்தி வருவதாக வெல்லாவெளிப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
0 Comments