Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி மின் தடை: மக்கள் அவதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பகலிலும் இரவிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுத்தப்படுவதால் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக மின் பாவினையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சர்வதேச தொழிலாளர் தினமான இன்றும்கூட காலை 11.30 மணியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பலபகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னறிவித்தலின்றி இவ்வாறு திடீரென மின் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் உட்பட மின்சாரம் மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் இடங்களான வைத்தியசாலைகள் மற்றும் இன்னபிற இடங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அடிக்கடி ஏற்படுத்தப்படும் மின்தடை குறித்து இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு அலுவலகக் கருத்தைப் பெறமுயற்சித்த போதும் அது கைகூடவில்லை

Post a Comment

0 Comments