Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வாழ்த்து கூறிவிட்டு மணமகளை கொன்ற நபர்; அதிர்ச்சியில் திருமண வீடு

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணம் நடப்பதற்கு முன்பு மணமகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் டாக்டர்.ரோகித் என்பவருக்கம் டாக்டர்.ஜெய்ஸ்ரீ நேம்தியோ என்பவுக்கும் திருமண நடைபெற இருந்தது.

அப்போது வாழ்த்துச்சொல்வதற்காக மேடையில் ஏறிய அனுராக் சிங் என்ற நபர் மணமக்களிடம் வாழ்த்துக்களை கூறிவிட்டு யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மணமகளை நோக்கி சுட்டார்.
உடனே அதிர்ச்சியடைந்த திருமண வீட்டினர் மணமகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குற்றவாளி அனுராக் சிங்கை அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் அந்தப்பெண் தன்னை ஏமாற்றியதால் தான் கொன்றதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments