Advertisement

Responsive Advertisement

ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் புதுவருட விளையாட்டு போட்டி நிகழ்வு


மட்டக்களப்பு ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் பாடசாலை அதிபர் எம் .ஐ .சுதாகரன் தலைமையில்  மட்டக்களப்பு  செலான் வங்கியின்  அனுசரனையுடன்  பாடசாலை மைதானத்தில் மாணவர்களுக்கான புதுவருட விளையாட்டு போட்டி நிகழ்வும் , மாணவர்களின் சிறுவர் சந்தையும் இடம்பெற்றது . 

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் அழைத்து வரப்பட்டு ,  மங்கள விளக்கேற்றத்துடன் , பாடசாலை கீதம்  இசைக்கப்பட்டு  விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது . 

நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி ,ஆரம்ப கல்வி ஆசிரியர் ஆலோசகர் திருமதி .அருளம்பலம் , கிழக்கு மாகான செலான் வங்கி  பிராந்திய முகாமையாளர்  எஸ்.முதுதிஸ்ஸ , மட்டக்களப்பு செலான் வங்கி முகாமையாளர் திருமதி .இளங்கோவன் , மட்டக்களப்பு செலான் வங்கி வாடிக்கையாளர் சார்பாக  கே . சண்முகம் , கே .திருக்குமார் மற்றும்  செலான் வங்கி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் .  

இங்கு இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் , ஆசிரியர்கள் மற்றும் வங்கி உத்தியோகத்தர்களின் விளையாட்டுகளும் இடம்பெற்றது .  

இவ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்  செலான் வங்கி அதிகாரிகளினால்  பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது . இதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வையும் வங்கி முகாமையாளர்கள்  ஆரம்பித்து, மாணவர்கள் விற்பனை செய்த பொருட்களையும் கொள்வனவு செய்து மாணவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்ததோடு  ,இம் மாணவர்கள்  செலான் வங்கியில் சிறுவர் கணக்கு ஆரம்பிக்க இன் நிகழ்வில் கலந்துகொண்ட வங்கி வாடிக்கையாளர்கள் பண உதவியும் வழங்கி வைத்தார்கள் .

























Post a Comment

0 Comments