Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டு. போதனா வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

தாதிய உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தயசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று ஞயிற்றுக்கிழமை(04) இரண்டாவது நாளாகவும் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இவ்வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளும் மூடப்பட்டுள்ளதால் பெருமளவான நோயாளர்கள் திரும்பிச்செல்வதை அவதானிக்க முடிகின்றது.

வெளிநோயாளர் பிரிவு, சிகிச்சை பிரிவுகள், மருந்து வழங்கும் பிரிவுகள, ஊசிபோடும் பிரிவுகள், உட்பட்ட அனைத்து பிரிவுகளும் இயங்காமையினால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடருமென பொதுச்சேவை ஐக்கிய தாதியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவர் வி.புஸ்பராசா தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் அனைத்து தாதியர்களும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                    
                  
                

Post a Comment

0 Comments