மட்டக்களப்பு மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் தனியார் கம்பனிகளுக்கு பெருந்தொகையான காணிகள் வளங்கப்படுகின்றது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விசனம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் தனியார் கம்பனிகளுக்கு பெருந்தொகையான காணிகள் வளங்கப்படுகின்றது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விசனம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருந்தொகையான அரச காணிகள் அரச சுற்று நிருவங்களுக்கு முறனாக தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்படுவதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கின்றது.
இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் பல வளங்களைக் கொண்டுள்ள போதிலும் வறுமைக் கோட்டில் முதலாம் இடத்தில் உள்ளது. இதனைத் தடுக்க அரசினால் மகிந்த சிந்தனையின் கீழ் பல வறுமை ஒழிப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும் இவ்வாறு பொருந்தொகையான வளம்மிக்க அரச காணிகள் தனியார் கம்பனிகளுக்கு அரச சுற்று நிருவங்களுக்கு முரணாக வளங்கப்படுகின்ற வேளையில் அப் பிரதேசத்தை நம்பி தொழல்புரிந்து கொண்டிருக்கும் விவசாயிகள், பண்ணையாளர்கள், மீனவர்கள் உள்ளீட்ட தொழிலாளிகள் பாரியளவில் பாதிப்பினை எதிர்நோக்குகின்றார்கள் எனவும் சுட்டிக் காட்டப்பட்டது.
மேலும் கருத்;துத் தெரிவிக்கையில் தனியார் முதலிட்டுக் கம்பனிகளுக்கு காணிகள் வழங்கப்படும் வேளையில் அப்; பிரதேச பொது அமைப்புக்கள், ஆலய நிருவாகம், கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற பிரதேச வாழ் அமைப்புக்களுடன் கலந்தாலோசித்து சமுத்திற்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் முன்மொழிவுகள் வளங்கப்பட்டு அவைபிரதேச, காணிப் பயன்பாட்டுக் குழுவில் அனுமதிக்கப்பட்டு மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவின் அங்கிகாரத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் மேலதிக அனுமதிக்காக மாகாணசபைக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். ஆனால் இந் நடைமுறைக்கு மாறாக வளம்மிக்க அரச காணிகள் தனியார் கம்பனிகளுக்கு முன்னனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி EP/PR/GA/2014/KA/01 எனும் இலக்கமிடப்பட்ட கடிதம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு எம்மால் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுவரையிலும் எமக்கு எந்தவெரு பதிலும் கிடைக்கவில்லை. அதன் காரணமாக பெறுக்கு மிக்க அரசியற் கட்சி என்ற வகையிலும், கிழக்க மண்ணில் அக்கறை கொண்ட கட்சி என்ற வகையிலும் மக்களுக்க தொளிவு படுத்தும் முகமாகவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை மேற்கொண்டுள்ளோம். எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு எமது மக்களுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அரச அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பட்டது
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச காணிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றாது தங்களினால் தனியார் கம்பனிகளுக்கு முன்னனுமதியுடன் வழங்குவது தொடர்பாக.
எனக்கு தெரிந்த வகையில் 1990/07/1ம் திகதிய 07/22/01ம் இலக்க சுற்றுநிருபம் மற்றும் 1995ம் ஆண்டின் 01/355ம் இலக்க சுற்றுநிருபங்களுக்கு அமைய காணி முதலீட்டு திட்டங்களுகளுக்கு தனியார் கம்பனிகளுக்கு வழங்குதலில் வெளிப்படைத் தன்மையோடு பிரதேச, காணிப் பயன்பாட்டுக் குழுவின் அங்கிகாரம் பெறப்பட்டு தங்களினைத் தலைமையாக கொண்ட மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவின் அங்கிகாரமும் பெறப்பட்டு மேலதிக அனுமதிக்காக மாகாண சபைக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். இவ்வாறான காணி நடைமுறை பின்பற்றப்படவேண்டி இருக்கையில் தாங்கள் தங்களது தற்துணிவில் பல தனியார் கம்பனிகள் முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு காணி வழங்கி இருப்பதனை அறிந்து நான் கவலையடைகின்றேன்.
எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 0704/2014ம் திகதி இடப்பட்ட LUPPD/12/08/01ம் இலக்க கடிதத்திற்கு அமைய வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட தம்பிரான்வெளியில் - 400 கெக்டயரும், காயான்கேணியில் - 350 கெக்டயரும், குருவிக்கல் மலை 01ல் - 780 கெக்டயரும், குருவிக்கல் மலை 02 இல் - 670 கெக்டயரும் வவுனதீவில் - 50 கெக்டயரும் அடங்கலாக ஊறணி, திராய்மடு பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் காணிகளுக்கு முன் அனுமதி அடிப்படையில் தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அரச அதிபர் அவர்களே! இம்மாவட்டத்தின் ஆளும் கட்சியின் பொறுப்புமிக்க அரசியல் பிரமுகர் என்ற அடிப்படையில் குறிப்பாக காணி சம்பந்தமான விடயங்களில் தெளிவும் வெளிப்பாட்டுத் தன்மையும் இருக்க வேண்டும் என கூறிவைக்க விரும்புகின்றேன், அத்தோடு என்னால் மேலே குறிப்பட்ப்பட்ட விடயங்கள் காணி சுற்றுநிருப நடைமுறைகளை மீறி தங்களின் சுய தலையீட்டுடன் தனியார் கம்பனிகளுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பின் அதனை இடைநிறுத்துவதோடு, முறையான காணி நடைமுறை பின்பற்றுதல்களை மேற்கொண்டே தனியார் முதலீட்டு கமபனிகளுக்கு எதிரவரும் காலங்களில் காணி வழங்கப்படவேண்டும் என்பதோடு, உரிய ஆவண பிரதிகளை எதிர்வரும் 28/04/2014ம் திகதிக்கு முன்னர் எமது பார்வைக்கு சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். தாமதமாகும் இடத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் காணிகள் அரச சட்டதிட்டங்களையும் சுற்றுநிருபங்களையும் மீறி முறையான பின்பற்றுதல்கள் இன்றி தனியார் கம்பனிகளுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படடுவது தொடர்பாக இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் மேலான கவனத்திற்கும், பொதுமக்களுக்கும் எடுத்துச் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்பதனை தங்களின் கவனத்திற்கு தருகின்றேன்.
ஒப்பம்
சி.சந்திரகாந்தன்


0 comments: