Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மகாஜன மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழாவும் சிறுவர் சந்தையும்


மட்டக்களப்பு  மகாஜன மகளிர் கல்லூரியில்  புதன்கிழமை காலை 08.30 மணிக்கு  அதிபர் திருமதி. துரை ராஜசிங்கம் தலைமையில்  மட்டக்களப்பு  செலான் வங்கியின் அனுசரனையுடன்  கல்லூரி மைதானத்தில் மாணவர்களுக்கான புதுவருட விளையாட்டு நிகழ்வும் , கல்லூரி மண்டபத்தில் சிறுவர் சந்தையும் இடம்பெற்றது. 
இந் நிகழ்வில் கிழக்கு மாகான செலான் வங்கி பிராந்திய முகாமையாளர் எஸ்.முதுதிஸ்ஸ , பிராந்திய வங்கி உத்தியோகத்தர் என்.சந்தன ,மட்டக்களப்பு வங்கி முகாமையாளர் திருமதி .இளங்கோவன் , செலான் வங்கி உத்தியோகத்தர்கள், கல்லூரி அபிவிருத்தி சங்க செயலாளர் .எம் .நிலாகரன்,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர். 

இங்கு  மாணவர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் ,ஆசிரியர்களின் விளையாட்டு நிகழ்சிகளும் இடம்பெற்றது. 

இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வங்கி அதிகாரிகளினால்  பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து சிறுவர்களின் சந்தை வங்கி முகாமையாளரினால் திறந்து வைக்கப்பட்டது. இன் சந்தை  நிகழ்வில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.























Post a Comment

0 Comments