
தாய்லாந்தில் நடைபெற்றுவரும் ஆசிய கனிஷ்ட பல்யுத்த போட்டி-2014 இல் இலங்கை வீரர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் அதன் பயிற்றுவிப்பாளராக மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த பிரதம மல்யுத்த பயிற்றுவிப்பாளாரான வேலு திருச்செல்வம் பங்கேற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மே மாதம் 8ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை தாய்லாந்தில் நடைபெற்று வரும் இவ் மல்யுத்தப் போட்டியில் 10 வீரர்கள் இலங்கையில் இருந்து பங்கு கொண்டுள்ள நிலையில் அவர்களுடன் மூன்று பயிற்றுவி;ப்hளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இம் மூன்று பயிற்றுவிப்பாளர்களுள் ஒரு தமிழரான உடற்கல்வி ஆசிரியரும் மல்யுத்த பிரதம பயிற்றுவிப்பாளருமாகிய வேலு திருச்செல்வம் பங்கு கொண்டுள்ளமையானது மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் அவர் கற்ற பாடசாலைக்கு கற்பிக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளது.
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற பிரதம மல்யுத்த பயிற்றுவிப்பாளர் வேலு திருச்செல்வம் பெரிய கல்லாறு மகாவித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றும் நிலையில் கிழக்குப் பல்கலைக் கழக மல்யுத்த அணி பயிற்றுவிப்பாளராகவும் சாண்டோ சங்கர்தாஸ் விளையாட்டுக் கழக செயலாளராகவும் உள்ளார்.
2005 ஆம் ஆண்டு முதல் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் இவர் தமது மாணவர்கள் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சின் விளையாட்டுப் போட்டியில் 4 பதக்கங்களையும் மல்யுத்த சம்மேளனத்தின் தேசிய போட்டியில் 6 பதக்கங்களையும் தேசிய ரீதியான பாடசாலை மட்டப் போட்டிகளில் 17 பதக்கங்களையும் பல்கலைக் கழகங்களுக்கிடையிலான போட்டியில் கிழக்குப் பல்கலைக் கழகம் 28 பதக்கங்களையும் பெறவும் உழைத்துள்ளார்.
0 Comments