சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஈனோஸ்வில்லி என்ற இடத்தில் வசிப்பவர் நோராஸ்லிண்டா ஆசாத் (34). தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளிக்க சென்றார். அப்போது அறையில் உள்ள குளியல் தொட்டிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. அதற்குள் காலை வைத்த நோராஸ் லிண்டாவை இடது பின்பக்கத் தொடையில் அந்த மலைப்பாம்பு கடித்தது. இதனால் வலி பொறுக்க முடியாமல் லிண்டா அலறினார். அவரை சுற்றி வளைத்து குளியல் தொட்டிக்குள் இழுத்தது.
அவர் கடுமையான போராட்டத்திற்கு பிறகு அந்த மலைப்பாம்பை தூக்கி வீசினார். அந்த மலைப்பாம்பு தப்பியோடி அருகில் இருந்த காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, லிண்டா மருத்துவமனைக்கு சென்று பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனால் தனது வீட்டில் உள்ள பாத்ரூமை பயன்படுத்தவே அச்சமாக உள்ளது. எனவே இனிமேல் வெளியிடங்களில் உள்ள பப்ளிக் டாய்லெட்டில் குளிக்கப் போவதாக நோராஸ்லிண்டா தெரிவித்துள்ளார்.
0 comments: