Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிறுமி மீது துஷ்பிரயோகம்: 62 வயது நபர் கைது

சிலாபம் விஜயகட்டுபொத்த பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும்  62 வயதுடைய நபரை கைதுசெய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

மேற்படி பிரதேசத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் தோட்டப்பராமரிப்பாளராகப் பணியாற்றும் நபரே இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யபட்டுள்ளார். 

மேற்படி நபரின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்டத்தில் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை இச்சிறுமி பாசடாலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தவேளை அங்கு வந்துள்ள சந்தேக நபர் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதன் பின்னர் எவராவது இது தொடர்பில் கேட்டால் தனது சித்தப்பாவே தன்னை இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறுமாறு சந்தேக நபர் சிறுமியிடம் தெரிவித்திருந்துள்ளார். 

எனினும் சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட சிலாபம் பொலிஸார் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments