Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான வேலைகளை 15.09-2014க்கு முன்னர் நிறைவு செய்யுமாறு பணிப்பு

கொழும்பிலிருந்து வருகைதந்த விளையாட்டு அபிவிருத்தித்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ரஞ்சினி ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் காலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான  அபிவிருத்தி வேலைகளைப் பார்வையிட்டனர்.
இந்தக்குழுவில், திணைக்களத்தின் பொறியியல்பணிப்பாளர் எஸ்.விஜயரெட்ண மற்றும் பொறியியலாளர்களான விஜயதுங்க ஆகியோரும் அடங்கியிருந்தனர்.
இவர்கள், மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான  அபிவிருத்தி வேலைகளைப் பார்வையிட்டு மிகுதியான வேலைகளை அடையாளம் கண்டு அவற்றை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அத்துடன் ஒப்பந்தகாரருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி எதிர்வரும் 15.09-2014க்கு முன்னர் வெபர் விளையாட்டு மைதான வேலைகளை நிறைவு செய்யுமாறு பணித்துள்ளனர்.
இதன் போது, மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் ரி.தனஞ்சயன், பொறியலாளர்களான  ரகுராமன், மங்களேஸ்வரன் உள்ளிட்டோரும் விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரனும் இணைந்திந்தார்.

அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தில் உள்ளக அரங்கு, நீச்சல் தடாகம், பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்குகின்றன.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் 150 மில்லியன் ரூபா செலவில், நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டு வருகிறது.   மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக இவ் விளையாட்டு மைதானம் விளங்குகின்றது.
வெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதிதாக அமைக்கப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தில், 400 மீட்டர் ஓடு தளம், கூடைப்பந்தாட்டக்கூடம், உதைபந்தாட்டு மைதானம், நீச்சல் தடாகம், பட்மின்ரன் தளம், கரப்பந்தாட்டத் தளம் என அனைத்து விதமான விளையாட்டுத் தளங்களும் அமையவுள்ளன.
வெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை கடந்த  2012ஆம் ஆண்டு  ஜனாதிபதி ஆரம்பித்து வைத்ததுடன், இதற்கான அடிக்கல்லினை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கௌரவ வி.முரளிதரன் நட்டு வைத்திருந்தார்.

மட்டக்களப்புக்கு இங்கிலாந்திலிருந்து வருகை தந்த யேசு சபையின் துறவியான அருட் தந்தை ஹரல்ட் ஜோன் வெபர், மட்டக்ளப்பு கோட்டைக்கு அண்மித்தாக, அங்கிலிக்கன் மிசன் கோயில் மற்றும்  வின்சன்ட் மகளிர் பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி  ஆகியவற்றுக்கு முன்னாக சதுப்பு நிலமாகக் கிடந்த ஒல்லாந்தர் காலத்தில்  சேமக்காலையாக இருந்த இடத்தினை 196 களின் ஆரம்பத்தில் கல்லோயா நீர்த்தேக்க நிர்மாணப் ப ணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தாரின் உதவியுடன் கனரக எந்திரங்களின் ஆதரவுடன் சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி வெபர் மைதானத்தினை உருவாக்கினார் என்பது வரலாறாகும்.
இவருடைய பெயரிலேயே மட்டக்களப்பு நகரின் பிரபல விளையாட்டு மைதானமான வெபர் மிளிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                
                
               

Post a Comment

0 Comments