அமெரிக்காவில் கடத்தி சிறை வைக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ஒருவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான்டா அனா பகுதியை சேர்ந்தவர் கார்சியா (41). இவர் லாரா என்ற 15 வயது சிறுமியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடத்தினார்.
பின்னர், அவரை ஒரு தனிமை சிறையில் அடைத்து வைத்தார். சிறுமி லாராவின் தாயாருடன் அவர் காதலராக சேர்ந்து வாழ்ந்தபோது அவளை கடத்தி சென்றார்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு லாராவை கலிபோர்னியா பொலிசார் மீட்டனர். பேஸ்புக் மூலம் தனது சகோதரியுடன் தொடர்பு கொண்ட லாரா தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவரை மீட்ட பொலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
அதாவது, கடத்தி சிறை வைக்கப்பட்ட லாராவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கார்சியா வற்புறுத்தி வந்தார். அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். மேலும் அவளை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக அவருக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது. பலமுறை தப்பிக்க முயன்றும் தன்னால் முடியவில்லை என்றும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து கார்சியா கைது செய்யப்பட்டார்.
0 Comments