2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.சாதாரணப் பரீட்சைப் பெறுபேற்று அடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயம் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியல் (ICT) பாடத்தில் சாதனை படைத்துள்ளது.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் 2013 ஆண்டில் 13 பாடசாலைகளில் இருந்து 66 மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியல் ( ICT) பாடத்திற்கு தோற்றி இருந்தனர். இம் மாணவர்களுள் 63 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் இவர்களுள் 22 மாணவர்கள் A தர சித்தியினையும், 13 B தரச் சித்தியினையும் 16 மாணவர்கள் C தரச் சித்தியினைகயும் 12 மாணவர்கள் S தரச் சித்தியினையும் பெற்றுள்ளனர்.
இந்த வகையில் 35 வீதமான மாணவர்கள்; A தர சித்தியினையும், 21 வீதமான மாணவர்கள்; B தர சித்தியினையும்,; 25 வீதமான மாணவர்கள்; C தர சித்தியினையும் 19 வீதமான மாணவர்கள்; S தர சித்தியினையும் பெற்று பட்டிருப்பு வலயத்தில் சாதனை படைத்துள்ளதாக பட்டிருப்பு கல்வி வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியல் ( ICT) பாட இணைப்பாளரும் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திரு.ரி.நித்தியானந்தம் தெரிவித்துள்ளார்
0 Comments