Advertisement

Responsive Advertisement

வாவியில் டிரக்டர் கவிழ்ந்து ஒன்பது பேர் பலி:


அரலகங்வில - அலுத்ஓய பிரதேசத்தில் இசட் டி வாவியில் டிரக்டர் (லேன் மாஸ்டர்) ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போது 9 பேரின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் யசித பொல்லேகல அத தெரணவிடம் தெரிவித்தார். 

மேலும் நான்கு பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மூவர் நலமுடன் இருப்பதாகவும் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments