Home » » கடலில் மூழ்கிய மாணவர்கள்! நெஞ்சை உருக்கும் மெசேஜ்கள்

கடலில் மூழ்கிய மாணவர்கள்! நெஞ்சை உருக்கும் மெசேஜ்கள்

தென்கொரியா கப்பல் விபத்தில் மாயமான மாணவர்கள், தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிக உருக்கமான மெசேஜை அனுப்பியுள்ளார்.
தென்கொரியாவில் செவோல் என்ற பயணிகள் கப்பல் 477 பயணிகளுடன் இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது.
இந்த கப்பலில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா செல்வதற்காக உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் 300 பேர் இருந்துள்ளனர்.
நேற்று காலை அந்த கப்பல் கடலுக்குள் மூழ்க தொடங்கியது, இதில் 6 பேர் பலியானார்கள், கடலுக்குள் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை 164 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சுமார் 291 பேர் காணாமல் போய்விட்டதாகவும் அரசு தரப்பில் பின்பு கூறப்பட்டது.
இந்நிலையில் கப்பல் கடலுக்குள் மூழ்கிய போது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் தங்களது நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் பெற்றோருக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பி உள்ளனர்.
அவற்றில் பரபரப்புடன் அதிகமாக பரவிய தகவல், ஒரு மாணவன் தனது தாய்க்கு அனுப்பி உள்ள எஸ்.எம்.எஸ். ஆகும்.
"Mom, I might not be able to tell you in person. I love you” என்று அனுப்பியுள்ளான்.
அந்த தாயும், I love you என பதிலளித்துள்ளார், அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்ட 179 பேரில் ஷின்னும் ஒருவன்.
இதேபோன்று தென் கொரிய கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்து நீருக்குள் மூழ்குவதற்கு முன்பாக இதுபோன்று பலர் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே என்னை மன்னித்துவிடுங்கள் என கப்பலின் கப்டன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |