இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து குமார் சங்கக்காரவும், மஹேல ஜெயவர்தனவும் 2015 உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கு முன்னர் விலகுவார்களாக இருந்தால், அதற்கு சிறிலங்கா கிரிககெட் நிறுவனமே பொறுபபுக்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் மஹேல ஜெயவர்தன விடுத்திருந்த அறிக்கை ஒன்று தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஒன்றை நடத்தவிருப்பதாக சிறிலங்கா கிரிக்கெட்டின் ஒழுக்காற்று பிரிவு அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே சஜீத் பிரேமதாஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
0 Comments