Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிராமியைகலையை கட்டிக்காக்கும் நோக்குடன் கலை விழா

மட்டக்களப்பு மாவட்டத்தில் அருகிவருகின்ற கிராமியைகலையை கட்டிக்காக்கும் நோக்குடன் களுவாஞ்சிகுடி நியு ஒலும்பிக் விளையாட்டுக் கழகம் முற்று முழுதாக கிரமியகலைப் படைப்புக்களை மையப்படுத்திய கலை விழாவினை வருடந்தேறும் நடாத்திவருகின்றனர்.
அந்த வகையில் இம்முறை களுவாஞ்சிகுடி நியு ஒலும்பிக் விளையாட்டுக் கழகத்தின் 48 வது நிறைவினை முன்னிட்டு அக்கழகத்தின் கலைப்பிரிவின் ஏற்பாட்டில் கலை, கலாசார விழா நேற்று செவ்வாய்க் கிழமை (22) இரவு களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய கலையரங்கில் நடைபெற்றது.

இதன்போது பல கிராமிய நடனங்கள், பல காசிய நாடகங்கள், சரித்திர நாடகம் என்பன இடம் பெற்றன.
இதில் இடம் பெற்ற சரித்திர நாடகமான 'வெள்ளையனுக்கு அச்சா நெஞ்சம்' எனும் நடகம் சிறப்பாக நடிகத்துக் காட்டப்பட்டது.
இதன்போது களுவாஞ்சிகுடி கிராமத்தினைச் சேர்ந்த பழம் பெரும் கலைஞர்ளும்; களுவாஞ்சிகுடி நியு ஒலும்பிக் விளையாட்டுக் கழகத்தினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

Post a Comment

0 Comments