கா.பொ.த.சாதாரண முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது பாடங்களில் அதிகளவு மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு கல்வி பணியகம் அறிவித்துள்ளது.
வெளியாகியுள்ள கா.பொ.த.சாதாரண தர முடிவுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 52 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 79 மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் பி.கோவிந்தராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய கல்லூரியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளதுடன் வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் இருந்து 18 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 21 மாணவர்கள் எட்;டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் புனித மைக்கேல் கல்லூரியில் 14மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 21 மாணவர்கள் எட்டு பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.இதேபோன்று புனித சிசிலியா பெண்கள் பாடசாலையிலும் 14 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 12 மாணவர்கள் 08 பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.
மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இரண்டு மாணவர்கள் ஒன்பது ஏ ;சித்திகளைப்பெற்றுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் எட்டு பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.
கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் இருந்து தோற்றியவர்களில் இரண்டு மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 10மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.
இதேபோன்று கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் ஏழு மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.
அத்துடன் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவன் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 44 ஒன்பது ஏ சித்திகளும் 59 எட்டு ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 52 ஒன்பது ஏ சித்திகளும் 79 எட்டு ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் கோவிந்தராஜா தெரிவித்தார்.
0 Comments