Advertisement

Responsive Advertisement

விளையாடாமலேயே இறுதிக்கு முன்னேறுகிறது இந்தியா?


தாகா: 20-20 உலககோப்பை 2வது அரையிறுதி போட்டி யில் இன்று இந்தியா - தென்ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தாகாவில் உள்ள மிர்பூர் மைதானத் தில் போட்டி தொடங்குகிறது. இன்றைய போட்டி யிலும் மழை குறுக்கிடும் என்று தெரிகிறது. தாகாவில் உள்ள வானிலை மையம் கூறுகையில், இன்றைய போட்டியின் போது மழை பெய்ய 70 சதவீத வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.எனவே போட்டி நடந் தாலும், மழை கண்டிப்பாக குறுக்கிடும். அதற்கேற்றார்போல் இரு அணிகளும் பேட் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகம். ஏனெனில் இந்திய அணி யில் அதிரடி பேட்ஸ்மேன்கள் பலர் உள் ளனர். இதேபோல் மழை தொடர்ந்தால் போட்டி நடைபெறாது. இதுவும் இந்தியாவுக்கு சாதகம்தான்.விளையாடாமலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா பெறும். ஏனெனில் குரூப்2ல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.அதேசமயம் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. இதனடிப்படையில் இந்தியா இறுதிபோட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு வழங்கப்படும். -

Post a Comment

0 Comments