மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் அதிபர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் திங்கட்கிழமை (21) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிசாம் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் நிலவி வருவதாக கூறப்படும் பல்வேறு குறைபாடுகளை நிவரத்திக்குமாறு கோரி கிராம மக்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்; திங்கட்கிழமை (21) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
பாடசாலை மலர் வெளியீட்டில் ஏற்பட்ட சர்ச்சை, அதிபர், ஆசிரியர்கள் மூவரை இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்தமை, பாடசாலையின் கல்வி வீழ்ச்சி என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்;த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ.எம்.நிசாம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தொலைபேசியில் உரையாடி நிலைமைகளை அறிந்துகொண்டதன் பின்னர் மாகாண கல்விப் பணிப்பாளரின் உத்தரவுக்கு அமைவாக பாடசாலையின் அதிபர், 2 ஆசிரியர்கள் இருவரை இடமாற்றம் செய்தனர்..
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் மயில்வாகனம் குருகுலசிங்கம் தலைமையிலான குழுவினர் பாடசாலைக்கு விஜயம்செய்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன் இடமாற்றம் தொடர்பான விடயத்தை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின்; நெறிப்படுத்தலில் முன்னெடுத்தனர்.
விசாரணையின் பின் ஏனைய விடயங்கள் முன்னெடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது.
0 Comments