சித்தாண்டி பிரதேசத்தில் மட்டுமல்லாது இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தற்பொது வரட்சி நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதனால், நீர்ப்பறாக்குறை பெருமளவில் ஏற்பட்டள்ளது. கடந்த வருடம் வடகிழக்கு பிரதேசங்களில் கிடைக்கவேண்டிய பருவமழைவீழ்ச்சியின் அளவானது சடுதியாக வீழ்ச்சியடைந்தமையால் இந்த வரட்சி நிலைமை ஏற்படத் தொடங்கியுள்ளது.
சித்தாண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் குளங்களின் நீர்கொள்ளளவு வெகுவாகக் குறைந்டதுவரத்தொடங்கியுள்ளது. இதனால் விசாய நடவடிக்கைகள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளன.
பெருமாவெளி மற்றும் வீதியன் வெளி குளங்களின் நீர்கொள்ளவு முற்றாக குறைந்தமையினால் கரைச்சை போன்ற பகுதிகளில் உள்ள நீர்தேக்கங்களிலிருந்து நீர்கொண்டு வரப்படுகின்றது. கால்வாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு குளத்திற்கு அருகாமையில் பாரிய நீர்ப்பம்பிகள் மூலம் குளத்திற்குள் நீர் இறைத்து அதிலிருந்து பயன்படுத்தப்படுகினகின்றது.
0 Comments