Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விபத்தில் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை (15)  மாலை மாடொன்றுடன்  மோட்டார் சைக்கிள்  மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இவ்விபத்தின்போது  அம்மாடும் உயிரிழந்துள்ளது. 
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வீதியை குறுக்கறுத்த மாட்டின் மீது மோதியுள்ளது.
புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவரே விபத்தில் படுகாயமடைந்ததுடன், இவர்  ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




Post a Comment

0 Comments