Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இலங்கை வங்கிக்கு முன்பாக சற்று முன் வாகன விபத்து


களுவாஞ்சிகுடி இலங்கை வங்கிக்கு முன்பாக 22.04.2014 காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்த அம்புலன்ஸ் வண்டி ஒன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் பெண் ஒருவருடன் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்






Post a Comment

0 Comments