மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த உயர்தரம் படித்துக்கொண்டிருக்கின்ற சங்கர்ஜன் அவர்கள் கதை, வசனம், எழுதி இயக்கி நடித்திருக்கும் குறுந்திரைப்படம் "ஆவியா" அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இக் குறுந்திரைப்படத்தின் கதை சற்று வித்தியாசமான முறையில் இதன் தயாரிப்பாளர் சங்கர்ஜன் சிந்தித்திருக்கின்றார். எம் எல்லோருக்குள்ளும் எழுகின்ற ஒரு வினா ஆவிகள் இருக்கின்றதா இல்லையா என்பதுதான். இக்குறுந் திரைப்படமும் ஆவி இருக்கின்றதா? இல்லையா என்கின்ற கேள்வியை ஒவ்வொருவர் மனதிலும் தோற்றுவித்திருக்கின்றது.
மாலை, இரவு வேளைகளில் ஆவிகள் உலாவுவதாக அயலவர்கள் எல்லோராலும் பேசப்படுகின்ற ஒரு பாழடைந்த காணியில் தமது விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அப்போது வீதியால் வந்த நண்பர்கள் குறித்த காணியில் ஆவிகள் குடியிருப்பதாக கேட்டுவிட்டு செல்கின்றனர்.
மாலை 5 மணியை தாண்டிவிடுகின்றது. ஒரு நண்பன் தனது வெளிநாட்டில் இருக்கும் மாமாவுடன் தொலைபேசியில் உரையாடுவதற்காக அவ்விடத்திலே இருக்க மற்ற நண்பர்கள் சென்றுவிடுகின்றனர்.
வீட்டுக்கு சென்ற நண்பணின் மோதிரம் விளையாடிய இடத்தில் தொலைகின்றது. மாலை 7 மணிபோல் மோதிரத்தைத் தேடுவதற்காக நண்பர்கள் வருகின்றனர்.
அப்போது அங்கே ஆவியினால் இவர்கள் உண்மையில் என்ன நடந்தது உண்மையில் ஆவி உண்டா? விடை காண திரைப்படத்தினைப் பாருங்கள்.
இக்குறுந்திரப்படத்தின் இறுதி முடிவானது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அமைந்திருப்பது. தயாரிப்பாளர் சங்கர்ஜனின் திறமையினை வெளிக்காட்டுகின்றது.
எந்தவித தொழில்நுட்ப அறிவோ தொழில்நுட்ப உபகரணங்களோ இல்லாமல் சிறப்பான முறையில் பாராட்டும் வகையில் இக் குறும்படம் வெளிவந்திருப்பது. எதிர்காலத்தில் நல்ல குறும்படங்களை தருவார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது.
0 Comments