Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சங்ககாராவை தொடர்ந்து ஜெயவர்தனாவும் ஓய்வு

இலங்கை அணியின் சங்ககாராவை தொடர்ந்து, ஜெயவர்தனாவும் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் டுவென்டி-20 உலக கிண்ணத் தொடர்ந்து நடைபெறுகிறது, இப்போட்டிகள் முடிவடைந்ததும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்ககாரா அறிவித்திருந்தார்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றாலும், மற்ற வகையான 20 ஓவர் போட்டிகளில்(ஐ.பி.எல். போட்டி உள்ளிட்டவை) விளையாட விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இவரைத் தொடர்ந்து இலங்கையின் முன்னணி வீரர் மகேள ஜெயவர்தனேயும், உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு சர்வதேச 20 ஒவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
36 வயதான ஜெயவர்தனே இதுவரை நடைபெற்ற அனைத்து 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரிலும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments